மிர்தரஸ், செப்.11 - கரோனா வைரஸ் பெருந்தொற் றுக்கு எதிரான பேராயுதமாக தடுப்பூசி கருதப் படுகிறது. இந்தி யாவில் நாள் தோறும் லட்சக் கணக்கானோ ருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.
இந்த ஆண்டு இறுதிக்குள் ஏறத்தாழ அனைவருக்கும் தடுப்பூசி போட்டுவிட வேண்டும் என்ற இலக்குடன் ஒன்றிய மாநில அரசுகள், தடுப்பூசி போடும் பணியை முடுக்கி விட்டுள்ளன.
இந்த நிலையில், பஞ்சாபில் வரும் 15 ஆம் தேதிக்குள் ஒரு டோஸ் தடுப்பூசி கூட போடாத அரசு ஊழியர்களுக்கு கட்டாய விடுப்பு வழங்கப்படும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பஞ்சாப் முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள உத்தரவில், அரசு ஊழியர்கள் மருத்துவ காரணங்களை தவிர்த்து, வேறு எதற்காகவும் தடுப்பூசி போடாமல் இருக்கக் கூடாது. மீறி தடுப்பூசி போட்டுக் கொள்ளாத பட்சத்தில், கட்டாய விடுப்பில் அனுப்பப் படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment