சென்னை பெருநகர பகுதி மேலும் விரிவாக்கம் செய்யப்படும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 2, 2021

சென்னை பெருநகர பகுதி மேலும் விரிவாக்கம் செய்யப்படும்

 அமைச்சர் சு.முத்துசாமி அறிவிப்பு

சென்னை, செப்.2 திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்கள் மற்றும் அரக்கோணத்தில் உள்ள ஒரு பகுதி மக்களிடம் கருத்துகளை கேட்டு சென்னை பெருநகர பகுதி மேலும் விரிவாக்கம் செய்யப்படும் என்று அமைச்சர் சு.முத்துசாமி அறிவித்தார்.

தமிழ்நாடு சட்டப் பேரவையில் நேற்று (1.9.2021) 4 துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடை பெற்றது. அதில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையும் ஒன்று. அந்த துறையின் அமைச்சர் சு.முத்து சாமி, உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து பேசியதுடன், இறுதியாக துறை சார்ந்த புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

155 அடுக்குமாடி குடியிருப்புகள்

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் பொதுமக்கள் வாங்கத்தக்க விலையில் வீடுகள் வழங்கும் அரசின் முயற்சியை நிறைவேற்றும் பொருட்டு சுயநிதி திட் டத்தின்கீழ் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும். சென்னை பாடிகுப்பத்தில் ரூ.62.77 கோடி மதிப்பில் 155 அடுக் குமாடி குடியிருப்புகள் கட்டப்படும். சென்னை அயனாவரத்தில் ரூ.86.31 கோடி மதிப்பில் 216 அடுக்குமாடி குடியிருப்புகளும் கட்டப்படும்.

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மனை மேம்பாட்டுத் திட்டம் வாயிலாக மனைகள் மேம்படுத்தப்படும். சென்னை அம்பத்தூரில் ரூ.8.87 கோடி மதிப்பில் 151 மனைகள், திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் ரூ.1.74 கோடி மதிப்பில் 45 மனைகள், சோழிங்கநல் லூரில் ரூ.4.75 கோடி மதிப்பில் 117 மனைகள் மேம்படுத்தப்படும்.

ரூ.451 கோடியில் மறுமேம்பாடு

சென்னை லாயிட்ஸ் காலனியில் குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்கள் ரூ.451 கோடி மதிப்பீட்டில் மறுமேம்பாடு செய்யப்படும். தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில், பொருளா தாரத்தில் நலிவுற்ற மற்றும் குறைந்த வருவாய், மத்திய வருவாய் பிரிவுகளில் வீடு வாங்குவோரின் பொருளாதார அழுத்தத்தை குறைக்கும்வகையில் தவணை முறை திட்டம் மீண்டும் அறிமுகப்படுத்தப்படும்.

சென்னை பெருநகர எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் ஏற்பட்டுவரும் விரைவான வளர்ச்சி மற்றும் அதற்கான உள்கட்டமைப்பு தேவைகளைக் கருத்தில்கொண்டு திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் சில பகுதிகள் மற்றும் அரக்கோணத்தை உள்ளடக்கி சென்னை பெருநகர பகுதி விரிவாக்குதல் பற்றி பொதுமக்கள் கருத்தைப் பெற்று விரிவாக்கப்படும். மீஞ்சூர் முதல் வண்டலூர் வரையிலான வெளிவட்டச் சாலையை ஒட்டி அமைந்துள்ள நிலத்தில் ஒருங்கிணைந்த திட்டம் செயல்படுத்தப்படும்.

கோயம்பேடு சந்தையில் கூடுதல் வசதி

கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தை நவீனப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி அங்காடி வளாகத்தில், பொருத்தமான போக்குவரத்து மேலாண்மை நடவடிக் கைகள், திறன்மிகு குப்பை அகற்றல் மற்றும் திடக்கழிவு மேலாண்மைப் பணிகள், பொதுமக்களுக்கான கூடுதல் பொதுவசதிகள் ஆகியவை ரூ.20 கோடி செலவில் ஏற்படுத்தப்படும்.

பழைய மாமல்லபுரம் சாலையையும், கிழக்கு கடற்கரை சாலையையும் இணைக்கும் வகையில், ஒக்கியம் துரைப்பாக்கம் கண்ணகி நகருக்கும், ஈஞ்சம்பாக்கத்துக்கும் இடையே ஏற்க னவே உள்ள சாலைகளை அகலப் படுத்தி, பக்கிங்காம் கால்வாய் மீது சுமார் ரூ.180 கோடி செலவில் உயர் மட்ட சுழற்சாலை வகை மேம்பாலம் கட்டப்படும்.

 இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment