தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (11.9.2021) சென்னை, திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோயில் திருமண மண்டபத்தில் ஒரு கால பூஜைத்திட்டத்தின் கீழ் உள்ள 12,959 கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள் பட்டாச்சாரியார்கள் / பூசாரிகளுக்கு மாத ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கும் அடையாளமாக 25 அர்ச்சகர்கள் பட்டாச்சாரியார்கள் / பூசாரிகளுக்கு ஊக்கத் தொகையினை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர் ஜே.எம்.எச். அசன் மவுலானா, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி. சந்தர மோகன், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் ஜெ. குமரகுருபரன், திருவாவடுதுறை ஆதீனம் சிறீமத் திருச்சிற்றம்பல தம்பிரான், மயிலம் பொம்மபுர ஆதீனம் சிறீலசிறீ சிவஞான பாலய, இராமநாதபுரம் சமஸ்தானத்தின் பரம்பரை தர்மகர்த்தா ராணி ராஜராஜேஸ்வரி, தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Saturday, September 11, 2021
கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கும் திட்டம்
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment