திராவிடப் பொழில் சந்தா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 8, 2021

திராவிடப் பொழில் சந்தா

கோவையில் "திராவிடப் பொழில்" இதழிற்கு சந்தா வழங்கி குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பகுத்தறிவாளர் கழகத் தில் இணைந்தனர்.

பகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர் தரும.வீரமணி, கோவை மாவட்ட பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் வழக்குரைஞர்  பெ. சின்னசாமி இல்லத்திற்கு சென்று நலம் விசாரித்தும்,  பகுத்தறிவாளர் கழகத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கை,  " பெரியார் உலகத்திற்கு " நிதி திரட்டுதல், விடுதலை நாளேடு, உண்மை, பெரியார் பிஞ்சு, தி மாடர்ன் ரேசனலிஸ்ட் ஆகிய இதழ்களுக்கு சந்தா சேர்த்தல் பற்றி கலந்தாலோசித்துக் கொண்டிருந்ததை கவனித்துக் கொண்டிருந்த மாவட்டத் தலைவர் அவர்களின் வாழ்விணையர் சி.செயலட்சுமி அவர்கள் தாங்களாகவே முன்வந்து "திராவிடப்பொழில்" இதழிற்கு ஆண்டு சந்தா ரூ.800/- வழங்கியதோடு  தங்களையும் தங்களின் மகன் வழக்குரைஞர் சி.செ.பிரபாகர், மகள் பொறியாளர் சி.செ.பிரதிபா ஆகியோரையும் பகுத்தறிவாளர் கழகத்தில் மகிழ்வுடன் இணைத்தார்கள்.

No comments:

Post a Comment