கரோனா தடுப்பூசிகள் செலுத்தினால் மட்டுமே பள்ளி குழந்தைகளுக்கு அனுமதி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 11, 2021

கரோனா தடுப்பூசிகள் செலுத்தினால் மட்டுமே பள்ளி குழந்தைகளுக்கு அனுமதி

லாஸ் ஏஞ்சல்ஸ், செப். 11- உலக அளவில்கரோனா பாதிப்பு எண்ணிக்கையில் அமெரிக்கா முதல் இடத் தில் உள்ளதுஇதனை முன்னிட்டு அந்நாட்டு மக்களுக்குதடுப்பூசி போடும் பணிகளை ஜோ பைடன்தலைமையி லான அரசு தீவிரப்படுத்தி உள்ளது.

இந்தநிலையில், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட வேண்டி யது கட்டாயம் என அறி விக்கப்பட்டு உள்ளது.  அதன்பின்னரே அவர் கள் பள்ளி கூடங்களுக்கு செல்வதற்கான அனும தியை பெறுவார்கள் என் பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment