செயற்கை செவிப்பறை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 2, 2021

செயற்கை செவிப்பறை!

காதில் உள்ளே இருக்கும் செவிப்பறையில் துளை விழுந்தால் சீக்கிரம் நோய் தொற்று ஏற்படலாம். அடுத்து காது வலி வரும்; செவித்திறன் பாதிக்கப்படும். இதற்கு அறுவை சிகிச்சை மூலம் செவிப்பறையை சரி செய்ய முயற்சி செய்யப்படுகிறது. ஆனால் வெற்றி வாய்ப்பு குறைவு.

எனவே தான், அமெரிக்காவிலுள்ள ஹார்வர்டு பல்கலை விஞ்ஞானிகள், உயிரி பாலிமர்களை கொண்டு, 'போனோகிராப்ட்' என்ற ஒரு செயற்கை செவிப்பறையை உருவாக்கி உள்ளனர். விலங்கு சோதனைகளில், போனோகிராப்ட் ஒரு செவிப்பறையை போல செயல்பட்டு, காது கேட்கும் திறனை பழைய நிலைக்கு கொண்டு வர உதவுவது தெரிய வந்துள்ளது. அதோடு, இயற்கையாக உள்ள செவிப்பறை இயல்பாக வளர்ந்து துளை அடைபடுவதற்கு சாரமாகவும் போனோகிராப்ட் இருக்கிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக, வலிமிக்க அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய அவசியம் போனோகிராப்டை பயன்படுத்துவதில் இல்லை. காரணம், போனோகிராப்டை நேரடியாக காதுக்குள் செலுத்தி பொருத்திவிட முடியும்.தற்போது, ஹார்வர்டு விஞ்ஞானிகள் போனோகிராப்டை சந்தைக்கு கொண்டு வர ஏற்பாடு செய்துள்ளனர். விரைவில், செவிப்பறை பாதித்தோருக்கு விடிவு கிடைக்கும்.

No comments:

Post a Comment