புதுடில்லி, செப்.3 நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், ஜி.டி.பி., எனும் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, 20.1 சதவீதம் வளர்ச்சி கண்டுள் ளது.
கரோனா இரண்டா வது அலை தாக்குதலி லிருந்து பொருளாதாரம் மீட்சி பெற்று வருவது மற்றும் ஒப்புநோக்குவ தற்கான, முந்தைய நிதி யாண்டின் முதல் காலாண் டில் ஜி.டி.பி., மிகவும் சரிவைக் கண்டிருந்தது ஆகியவை காரணமாக, இந்த வளர்ச்சி எட்டப் பட்டுள்ளது.
கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில், ஜி.டி.பி., 24.4 சதவீதம் அளவுக்கு சரிவைக் கண்டி ருந்தது. ரிசர்வ் வங்கி, மதிப்பீட்டு காலாண்டில் வளர்ச்சி 21.4 சதவீதமாக இருக்கும் என கணித்து அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.தற்போ தைய வளர்ச்சிக்கு தயா ரிப்பு துறை, சுரங்கம் மற்றும் கட்டுமான துறை ஆகியவை அதிக உதவிகர மாக இருந்துள்ளது. மே லும், வளர்ச்சிக்கு விவசாய துறையும் அதிகளவில் பங்களிப்பு செய்துள்ளது. இருப்பினும், சேவைகள் துறை பின்தங்கியே உள் ளது.
தயாரிப்பு துறை 49.6 சதவீதமும்; கட்டுமான துறை 68.3 சதவீதமும் வளர்ச்சி அடைந்துள்ளது. முக்கிய 8 துறைகள் நாட்டின் முக்கிய எட்டு துறைகள் கடந்த ஜூலை யில் 9.4 சதவீதம் அளவுக்கு வளர்ச்சி கண்டுள்ளது. இதுவே, கடந்த ஆண்டு இதே காலத்தில் 7.6 சத வீதம் அளவுக்கு சரிவைக் கண்டிருந்தது.
நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, பெட்ரோலிய சுத்திகரிப்பு பொருட்கள், உரம், உருக்கு, சிமென்ட், மின்சாரம் ஆகியவை எட்டு முக்கிய துறை களாகும். இந்த எட்டு துறைகளின் உற்பத்தியுமே கடந்த ஜூலையில் அதி கரித்துள்ளது.
நாட்டின் நிதிப் பற்றாக்குறை, கடந்த ஜூலை மாத இறுதி நிலவரப்படி, 3.21 லட்சம் கோடி ரூபாயாக அதி கரித்துள்ளது. இது நிதிநிலை மதிப்பீட்டில், 21.3 சதவீதம் ஆகும். இதற்கு முந்தைய நிதியாண்டில் இதுவே, 103.1 சதவீதமாக அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment