கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தேர்தல் பரப்புரையின்போது தம் மீது கற்கள் வீசியவர்களுக்குக் கண்டனம் தெரி வித்துள்ளார்.
கற்களை வீசியவர்கள்,கோவிட் தடுப் பூசிக்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள் ஆவர்.
இதற்கு கருத்து தெரிவித்த பிரதமர் தேர்தல் பரப்புரையின் போது கற்களை வீசி, மற்றவர்களின் பாதுகாப்பிற்கு ஆபத்து விளைவிப்பது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று குறிப்பிட்டார்.
கனடாவின் சில பகுதிகளில், முகக் கவசம் அணிவதாலும் தடுப்பூசி போட்டுக் கொள்வதாலும், அவற்றை பொதுமக்களி டையே வலியுறுத்தும் சுகாதார ஊழியர்கள், முன்களப்பணியாளர்கள் ஆகியோர் துன் புறுத்தலுக்கும் அச்சுறுத்தலுக்கும் ஆளா வதாக அவர் சொன்னார்.
சமீபத்தில் தடுப்பூசிக்கு எதிர்ப்புத் தெரி வித்துக்கொண்டிருந்த கூட்டம் ஒன்றைக் கடந்து செல்லும்போது, பிரதமர் ட்ரூடோ, அவரது பாதுகாவலர் ஆகியோர் மீது வெள்ளைக் கற்கள் வீசப்படுவது காணொ ளியில் பதிவாகியுள்ளது.
கிட்டத்தட்ட 99.9 விழுக்காடு கற்றவர் கள் உள்ள நாடுகளில் கனடாவும் ஒன்றாகும். அங்கும் இவ்வாறு முட்டாள் தனமான செயல்களைச் செய்பவர்கள் உள்ளனர் என்பது கல்விக்கும் பொது அறிவிற்கும் தொடர்பில்லை என்று பெரியார் கூறியதற்கு சரியான உதாரணமாகத்தான் உள்ளது.
No comments:
Post a Comment