குழந்தைகளுக்கான கோவோவேக்ஸ் தடுப்பூசி பரிசோதனை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 1, 2021

குழந்தைகளுக்கான கோவோவேக்ஸ் தடுப்பூசி பரிசோதனை!

புதுடில்லி, செப். 1- இந்தியா வில்கரோனாவுக்கு எதிரான கோவோவேக்ஸ் தடுப்பூசியின் இரண்டா வது, மூன்றாவது கட்ட பரிசோதனை நடக்க உள்ளது. இந்த தடுப்பூசி 920 குழந்தைகளுக்கு செலுத்தி பரிசோதிக்கப் படுகிறது. அமெரிக்காவில் நோவோவேக்ஸ் நிறுவனத் தார் குழந்தைகளுக்கு கரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை நோவோ வேக்ஸ் என்ற பெயரில் உருவாக்கி உள்ளனர்.

இந்த தடுப்பூசியை இந்தியாவில் கோவோ வேக்ஸ் என்ற பெயரில் தயாரித்து வழங்குவதற்கு புனேயில் உள்ள இந்திய சீரம் நிறுவனத்துடன் நோவோவேக்ஸ் நிறுவ னத்தார் ஒப்பந்தம் செய்து  கொண்டுள்ளனர். இந் திய சீரம் நிறுவனம்தான், கோவிஷீல்டு தடுப்பூசியை யும் தயாரித்து அளித்து வருகிறது.

கோவோவேக்ஸ் தடுப்பூசியின் இரண்டா வது மற்றும் மூன்றாவது கட்ட மருத்துவ பரிசோ தனையை நடத்துவதற்கு இந்திய சீரம் நிறுவனத் துக்கு இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு தலைமை இயக்குநர் கடந்த மாதம் ஒப்புதல் அளித்தார்.

இதையடுத்து இந்த தடுப்பூசியை 2 வயது முதல் 17 வயது வரையி லான குழந்தைகளுக்கு செலுத்தி பரிசோதிக்க உள்ளனர். இந்த பரி சோதனை நாடு முழுவ தும் 12 நகரங்களில் நடக்க உள்ளது. இதற்காக 920 குழந்தைகளை தேர்வு செய்கிறார்கள். 2-முதல் 11 வயது பிரிவிலும், 12- முதல் 17 வயது பிரிவிலும் தலா 460 குழந்தைகள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இதற்காக தன்னார்வ குழந்தைகளை தேர்வு செய்வது டில்லி ஹாம் டர்டு மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் தொடங்கி உள்ளது.

இந்தியாவில் ஜைடஸ் கேடிலா நிறுவனத்தார் ஜைகோவ்-டி என்ற தடுப் பூசியை உருவாக்கி உள் ளனர். இந்த தடுப்பூசி யையும் குழந்தைகளுக்கு செலுத்த முடியும். இந்த தடுப்பூசியின் அவசர பயன் பாட்டுக்கு ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்டு விட்டது. இதுவே இந் தியாவில் குழந்தைகளுக்கு பயன்பாட்டுக்கு வருகிற முதல் கரோனா தடுப் பூசியாக அமையும் என் பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment