ஒசூர், செப்.2 ஒசூரில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் ஒசூர் அனைத்து குடியிருப்போர் நலச் சங்கம் இணைந்து நடத்தும் 10ஆவது புத்தக திருவிழாவை ஒசூர் பெருமாள் மணி மேகலை கல்விநிறுவனங்களின் தலைவர் பெ.குமார் திறந்து வைத்தார்.
பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் திராவிடர் கழக வெளி யீடு நூலின் முதல் விற்பனையை மாவட்ட ப.க.தலைவர் பேராசிரியர் கு.வணங்காமுடி, மாவட்ட தலைவர் சு.வனவேந்தன் ஆகியோர் முன்னி லையில் பெ.குமார் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட மகளிர் பாசறை தலைவர் கோ.கண்மணி, ப.க.மாவட்ட செயலாளர் சிவந்தி அருணாசலம், குடியிருப்போர் சங்க தலைவர் துரை,முனைவர் சேதுராமன், அறிவியல் இயக்கம் மாநில செயற்குழு உறுப்பினர் சிவகுமார், ஆடிட்டர் பாலசுந்தரம், பைரவி ஆர்ட் சிவா, எழுத்தாளர் கமலாயன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment