ஏழை - எளியோர் வாழும் இடத்திலேயே சிறப்பு மருத்துவ சேவை அளிக்கும் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 30, 2021

ஏழை - எளியோர் வாழும் இடத்திலேயே சிறப்பு மருத்துவ சேவை அளிக்கும் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம்

முதலமைச்சர் மு..ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை, செப்.30 ஏழை-எளி யோர் வாழும் இடத்திலேயே சிறப்பு மருத்துவசேவை அளிக்கும் ‘‘கலை ஞரின் வருமுன் காப்போம்'' திட்டத்தை வாழப்பாடியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு..ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் 2021-2022 ஆம் ஆண்டுக்கான மானியக்கோரிகையில், கலைஞரின் வருமுன் காப்போம் திட் டம் ஆண்டுக்கு ஆயிரம் சிறப்பு முகாம்கள் மூலம் மீண்டும் புதுப்பொலி வுடன் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஏழை-எளிய மக்கள் தங்களுக்கு நோய் ஏற்பட்டு, அதனை சரி செய்வதற்காக மட்டுமே மருத்துவர்களையும், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களையும் நாடிச் செல் கின்றனர்.

நோய்கள் வருமுன் அதனை தடுக்கும் அணுகுமுறை குறித்து மக்க ளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி, ஆரோக்கியத்துடன் வாழவேண்டும் என்ற சிந்தனையை உருவாக்கிட, கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் பயன்படும். இந்த திட்டத்தின் மூலம், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராமங்கள், பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளில் உள்ள மக்கள் அனைவரும் மருத்துவ சிகிச்சை பெற்று பயனடைவார்கள்.

பொதுமக்கள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மற்றும் சிறப்பு மருத்துவ சிகிச்சை எளிதில் கிடைக்கச் செய்தல், நோய்களுக்கான பரிசோதனை மற்றும் உடல்நலம் குறித்து ஆலோசனை வழங்குதல், அதிநவீன பரிசோதனை சாதனங்களால் நோய்களை கண்டறி தல், நோய்கண்டவர்களுக்கு உடனடி சிகிச்சை அளித்தல், சுகாதார விழிப்புணர்வு கல்வி வாயிலாக உடல்நல மேம்பாடு மற்றும் தனிநபர் ஆரோக்கியத்தை உருவாக்குதல் போன்றவற்றை நோக்கமாக கொண்டு கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் செயல்படும்.

இந்தத் திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 1,250 சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். இந்த முகாம்களில் பன்முனை மருத்துவ பரிசோதனை, கண், பல், காது-மூக்கு-தொண்டை, வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், காசநோய், மூட்டு மற்றும் எலும்பு சம்பந்தமான நோய்கள், இதய நோய்கள், சிறுநீரக கோளாறு, குழந்தை நல சிறப்பு மருத்துவம், மன நல மருத்துவம், கர்ப்பிணி தாய்மார் கள் மற்றும் பெண்களுக்கான சிறப்பு மருத்துவம் மற்றும் புற்றுநோய் மருத்துவம் போன்ற சிகிச்சைகள் அளிக் கப்படும்.

ஒவ்வொரு மாதமும், வருமுன் காப்போம் மருத்துவ முகாம்கள் நடத்தவேண்டிய இடங்களை தேர்வு செய்து, எந்தெந்த நாள்களில், எந்தெந்த மருத்துவக்குழு, எந்தெந்த இடங்களுக்கு செல்லவேண்டும் என்பதை முன்கூட்டியே முடிவு செய்து முகாம்கள் நடத்தப்படும். போக்குவரத்து வசதி அதிகம் இல் லாத இடங்களிலும் முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு முகாமின்போதும் நல்வாழ்வு பற்றிய கண்காட்சி, கிராமப்புற மக்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படும்.

மருத்துவ பரிசோதனைக்கு பின் னர் முகாமிலேயே சிகிச்சையும், இலவசமாக மருந்துகளும் வழங் கப்படும். தொடர் சிகிச்சை தேவைப் படின், நோயின் தன்மையைப் பொருத்து எந்த மருத்துவமனைக்கு சிகிச்சை பெற செல்ல வேண்டும் என்ற விவரங்களுடன் அடையாள அட்டைகள் வழங்கப்படும். தொடர் சிகிச்சை பெறவேண்டியவர்களுக்கு தேவைப்படும் விவரங்கள் அனைத்தும் மாவட்ட அளவில் முகாம்வாரியாக கணினியில் பதியப்பட்டு, தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அரசினர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் ஏழை-எளியோர் வாழும் இடத்திலேயே சிறப்பு மருத்துவச்சேவை அளிக்கும் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தைமுதல்-அமைச்சர் மு..ஸ்டாலின் நேற்று (29.9.2021) தொடங்கி வைத்தார்.

பின்னர், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு அடையாள அட்டைகள், 100 சதவீதம் கரோனா தடுப்பூசி செலுத்தும் இலக்கை அடைந்த ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு நன்சான்றிதழ்கள், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் கரோனா நோய் தொற்றால் பெற்றோரை இழந்த 54 குழந்தைகளுக்கு ரூ.1 கோடியே 62 லட்சம் நிவாரண நிதியை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பி னர்கள், அரசு உயரதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment