சென்னை, செப் 11 மாநில மொழிகளில் யுபிஎஸ்சி தேர்வு நடத்தக் கோரிய வழக்கில் ஒன்றிய அரசு 8 வாரங்களில் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் தாக்கீது பிறப்பித் துள்ளது.
அய்ஏஎஸ், அய்பிஎஸ், உள்ளிட்ட பதவி களுக்கான தேர்வை யுப்எஸ்சி (ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம்) ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது. தற்போது இந்த தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமே நடக்கின்றன. இதனால் பல மாணவர்களால் தேர்வு எழுத முடியாத நிலை உண்டாகிறது.
இதையொட்டி சென்னை உயர்நீதி மன்றத்தில் யு பி எஸ் சி தேர்வுகளை மாநில மொழிகளில் நடத்த உத்தரவிடுமாறு வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையின் போது இந்த தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் எந்த மாநிலத்திலும் பணி அமர்த்தப்படலாம் எனவும் அதனால் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வு நடத்தப்படுவதாக ஒன்றிய அரசு தெரிவித்தது.
இந்த தேர்வுகளை மாநில மொழிகளில் நடத்துவது குறித்து இன்னும் 8 வாரங்களில் பரிசீலனை செய்து முடிவு செய்ய வேண்டும் என ஒன்றிய உள்துறைக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரோனாவால் உயிரிழந்தோருக்கு மனிதாபிமான அடிப்படையிலேயே இழப்பீடு
உச்சநீதிமன்றம் விளக்கம்
புதுடில்லி,செப்.11- உச்சநீதிமன்றத்தில் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த தீபக்ராஜ் சிங் தாக்கல் செய்த பொதுநல மனுவில், மருத்துவ அலட்சியப்போக் கால் கரோனா 2ஆவது அலை யில் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் குடும் பங்கள் அனைத்துக்கும் இழப்பீடு வழங்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிட வேண் டும் என்று கோரினார். இந்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்தது.
அப்போது நீதிபதிகள், கரோனா 2ஆவது அலையின் அனைத்து உயிரிழப்புகளும் மருத்துவ அலட்சியப் போக்கால் ஏற்பட்டதாக கருத முடியாது என்றும், 2ஆவது அலையில் பாதிப்பு நாடு முழுவதும் இருந்தது எனவும் தெரிவித்தனர். கரோனா முதல் அலையில் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் குடும்பங் களுக்கு இழப்பீடு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது மனிதாபிமானத்தின் அடிப் படையிலேயே தவிர, மருத்துவ அலட்சி யப் போக்கை காரணம் காட்டி அல்ல என்று தெளிவுபடுத்தினர். மேலும் மனுவை திரும்பப் பெற அனுமதி அளித்து வழக்கை முடித்து வைத்தனர்.
No comments:
Post a Comment