புதுடில்லி,செப்.11 ரயில்கள் காலதாமதமாக உரிய ரயில் நிலையத்தை அடைந்தால் பயணிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ரயில்வே நிர்வாகம் அளிக்கும் சேவையின் குறைபாடுதான் குறித்த நேரத்தில் ரயில்கள் அந்தந்த ரயில் நிலையங்களை சென்றடைவதில்லை என்பதைக் காட்டுகிறது. இதற்கு பயணி களுக்கு உரிய இழப்பீட்டை ரயில்வே நிர்வாகம் அளித்தாக வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
பயணிகள் போக்குவரத்தில் தனியார் துறைக்கு இணையாக போட்டியிட வேண்டுமாயின் பயண நேரம் மிகவும் முக்கிய மானது. இதற்கேற்ப தங்களது செயல்முறையில் மாற்றங்களைச் செய்துவேலை கலாச்சாரத்தை ரயில்வேநிர்வாகம் உருவாக்க வேண்டியது மிகவும் அவசியம். கால தாமதத்துக்கு யாராவது பொறுப்பேற்க வேண்டும் என்றும் நீதிபதிகள் எம்.ஆர். ஷா, அனிருதா போஸ் ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.
பயணி ஒருவர் 2016-இல் காஷ் மீரிலிருந்து தனது குடும்பத் தினருடன் பயணம் செய்தபோது ரயில் 4 மணி நேரம் கால தாமதமாகி உள்ளது. இதனால் நகருக்கு அவர் செல்ல வேண்டிய விமானத்தை தவற விட்டுள்ளார். அதேபோல அந்த குடும்பத்தினர் தால் ஏரியில் படகு சவாரி செய்வதற்காக செய்திருந்த முன்பதிவும் ரத்தானது. இதற்கு தாங்கள் பயணம் செய்த ரயில் உரிய நேரத்தில் ஜம்முவை சென்று அடையாததே காரணம் என வழக்கு தொடுத்துள்ளார்.
இது தொடர்பாக முதலில் விசாரித்த மாவட்ட நுகர்வோர் நிர்வாகம் ரயில்வே துறையின் சேவைகுறைபாடுதான் காரணம் எனகுறிப்பிட்டு டாக்ஸிக்கு அக் குடும்பத்தினர் செலவிட்ட ரூ.15 ஆயிரத்தை வழங்க வேண்டும் என்றும் படகு சவாரிக்கு செலுத் தியிருந்த ரூ.10 ஆயிரத்தை அளிக்க வேண்டும் என்றும் தீர்ப் பளித்திருந்தது. அத்துடன் ஒவ் வொரு பயணிக்கும் இதனால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ஈடாக ரூ.5 ஆயிரம் அளிக்க வேண்டும் என்று வட மேற்கு ரயில்வே நிர்வாகத்துக்கு உத்தர விட்டிருந்தது.
இதை எதிர்த்து ரயில்வே நிர்வாகம் மேல் முறையீடு செய்தது. மாநில மற்றும் தேசிய நுகர்வோர் ஆணயத்தில் இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் நுகர்வோருக்கு ஆதர வாக தீர்ப்பு வந்தது.
இது தொடர்பாக உச்ச நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனு விசா ரணைக்கு வந்தது. இதை விசாரித்த நீதிபதிகள், ரயில்கள் தாமதமானது சேவை குறை பாடாகத்தான் கருதப்படும். இதற்கான இழப்பீட்டை பயணி களுக்கு வழங்கித்தான் ஆக வேண்டும் என்று தீர்ப்பில் குறிப்பிட்டு ரயில்வே நிர்வாகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
No comments:
Post a Comment