இந்தியன் எக்ஸ்பிரஸ்:
· பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும். ஆக்சிஜனை உள்ளே இழுத்து மீண்டும் வெளியிடும் ஒரே விலங்கு பசு என விஞ்ஞானிகள் நம்புவதாகவும் அலகாபாத் நீதிமன்ற நீதிபதி கூறியுள்ளார்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
· சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ சேர்க்கையில் மருத்துவக் கல்வி இயக்குநரகத்தின் தரவுகளின்படி, 17 சதவீதத்திற்கும் குறைவாகி பணியாற்றும் மருத்துவர்கள் இடங்களைப் பெற்றனர், இது 2017-க்கு முன் 40 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்தது.
தி டெலிகிராப்:
· 1991-க்கு முன்னர் இருந்தது போன்ற பொருளாதார நெருக்கடி வர உள்ளது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எச்சரிக்கிறார். நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரித்து வருவதாக மோடி அரசு கூறுவதற்கு, அவர்களின் கருத்தில் ஜிடிபி என்பது - ‘கேஸ் (எரிவாயு), டீசல், பெட்ரோல்’ என சாடியுள்ளார்..
- குடந்தை கருணா
No comments:
Post a Comment