அமைச்சர் செஞ்சி மஸ்தான் அறிவிப்பு
சென்னை, செப்.9 சிறுபான்மையினர் நல விடுதிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு வருமான வரம்பு 2 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில், சிறுபான்மையினர் நலத்துறையில் பல்வேறு புதிய அறிவிப்புகளை அமைச்சர் செஞ்சிமஸ்தான் வெளியிட்டார்.
அதன்படி, 14 சிறுபான்மையினர் நல கல்லூரி விடுதிகளில் ரூ.14 லட்சம் செலவில் நூலகம் ஏற்படுத் தப்படும் என அப்போது அவர் கூறினார்.
* 14 சிறுபான்மையினர் நல கல்லூரி விடுதி மாணவ, மாணவி யருக்கு தமிழ்நாடு திறன் வளர்ப்பு மேம்பாட்டுக் கழகம் மூலம் தனித் திறன் மற்றும் ஆங்கிலப் பேச்சாற்றல் பயிற்சி அளிக்கப்படும்.
*ஜெருசலேம் பயணத்திற்கு அருட்சகோதரிகளுக்கு வழங்கப் படும் மானியம் ரூ.37 ஆயிரத்தில் இருந்து ரூ.60 ஆயிரமாக உயர்த் தப்படும்.
* சிறுபான்மையினருக்கு ஆயி ரம் இலவச மோட்டாருடன் கூடிய தையல் இயந்திரங்கள் வழங்கப்படும்.
* அனைத்து மாவட்டங்களில் கூடுதலாக முஸ்லிம், கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கங்கள் தொடங் கப்படும்.
* வக்பு வாரியத்திற்கு வழங்கப் படும் ஆண்டு நிர்வாக மானியம் உயர்த்தப்படும்
* கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற் றும் பணியாளர்கள் நல வாரியம் அமைக்கப்படும்.
* சிறுபான்மையினர் நல விடு திகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு வருமான வரம்பு 2 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் என்றார்.
No comments:
Post a Comment