புதுடில்லி, செப்.10 சீனாவில் இருந்து இறக்குமதியாகும் வைட்டமின் 'சி' ஊட்டச் சத்து பவுடருக்கு, பொருள் குவிப்பு வரி விதிக்க, வர்த்தக குறை தீர்ப்பு தலைமை இயக்குநரகம், ஒன்றிய நிதியமைச்சகத்திற்கு பரிந்துரைத்துள்ளது.
இது குறித்து, இந்த இயக்குநரகம் வெளியிட்டு உள்ள அறிக்கை விபரம்:சீனாவில் இருந்து, இந்திய மருந்து நிறுவனங்கள் வைட்டமின் 'சி' பவுடரை இறக்குமதி செய்கின்றன. ஆனால், அதன் விலை, உள்நாட்டு வைட்டமின் சி விற்பனை விலையை விட குறைவாக இருப்பது, விசாரணையில் தெரிய வந்துள்ளது.இதனால், இத்துறையில் உள்ள உள்நாட்டு நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
எனவே, சீனாவில் இருந்து இறக்குமதியாகும் வைட்டமின் ‘சி' பவுடருக்கு, அடுத்த அய்ந்து ஆண்டுகளுக்கு பொருள் குவிப்பு வரி விதிக்குமாறு பரிந்துரைக்கப்படுகிறது. கிலோ வைட்டமின் ‘சி' பவுடருக்கு, 240 முதல் 266 ரூபாய் வரை வரி விதிக்கலாம்.
இதன் மூலம், உள்நாட்டில் வைட்டமின் ‘சி' விற்கப்படும் விலைக்கு குறைவாக, சீன இறக்குமதியை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்படும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து, ஒன்றிய நிதியமைச்சகம் விரைவில் முடிவு எடுக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment