அணு உலையை மீண்டும் இயக்க‌த் தொடங்கிய வடகொரியா! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 1, 2021

அணு உலையை மீண்டும் இயக்க‌த் தொடங்கிய வடகொரியா!

சியோல், செப். 1- கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதமற்ற பிரதேசமாக மாற்றுவது தொடர்பாக வட கொரியாவுக்கும் அமெரிக்காவுக் கும் இடையே நடந்த பேச்சுவார்த் தைகள் எந்தவித உடன்பாடும் எட்டாமல் தோல்வியில் முடிந்தன. மீண்டும் இந்த பேச்சுவார்த்தையை தொடங்க அமெரிக்கா ஆர்வம் காட்டி வரும் நிலையில்வட கொரியா அதனை தட்டிக்கழித்து வருகிறது.

இந்த நிலையில் அணு ஆயுதங் களை உற்பத்தி செய்வதற்காக வட கொரிய மீண்டும் அணு உலையை இயக்க தொடங்கியுள்ளது அய்.நா. சபையின் பன்னாட்டு அணுசக்தி முகமை தெரிவித்துள்ளது. தலை நகர் பியாங்யாங்கின் வடக்கு பகு தியில் யங்பியன் நகரில் உள்ள அந்த அணு உலையில் அணு ஆயு தங்கள் தயாரிக்க பயன்படும் புளூட் டோனியம் தயாரிக்கப்படுவதாக நம்பப்படுகிறது.

பன்னாட்டு அணுசக்தி முகமை யின் உறுப்பினராக இருந்த வட கொரிய அரசு 2009-ம் ஆண்டு நீக்கப்பட்டது. எனினும் செயற் கைக்கோள் ஒளிப்படங்கள் மூலம் வடகொரிய அணு உலைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

கடந்த ஜூலை மாதம் முதல் இந்த அணு உலையில் இருந்து குளிர்ந்த நீர் வெளியேற்றப்படுவது அந்த அணு உலை இயக்கப்படுவ தைக் காட்டுவதாக பன்னாட்டு அணுசக்தி முகமை தனது ஆண்டு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

5 மெகாவாட் திறனுடைய உலை களை கொண்டுள்ள யங்பியன் அணுசக்தி வளாகம் வடகொரிய அணு ஆயுத திட்டத்தின் மய்யமாக உள்ளது. அமெரிக்காவின் அப் போதைய அதிபர் டிரம்ப் மற்றும் கிம் ஜாங் அன் ஆகியோர் இடையே நடந்த பேச்சுவார்த்தைகளின் மய் யமாக இந்த யங்பியன் அணு உலை இருந்தது.

வடகொரியா மீது விதிக்கப் பட்ட பொருளாதார தடைகள் நீக் கப்பட்டால் இந்த அணு உலை கலைக்கப்படும் என்ற கிம்மின் கோரிக்கையை டிரம்ப் மறுத்து விட்டார் என்றும், அப்போது செய்திகள் வெளியாகின. இந்த அணு உலை மற்றும் ஆய்வகத்தின் மேம்பாடு ஆழமான பிரச்சினை களை உண்டாக்கக்கூடியது என் றும் அய்.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களுக்கு எதிராக உள்ளதாகவும் பன்னாட்டு அணு சக்தி முகமை தெரிவித்துள்ளது.

தங்களது அணு ஆயுத கையி ருப்பு மேலும் அதிகமாக்கப்படும் என்று கடந்த ஜனவரி மாதத்தில் கிம் ஜாங் அன் உறுதியளித்திருந்தார்.

மிகப்பெரிய அளவிலான ஹைட்ரஜன் குண்டை உருவாக்க தங்களது அறிவியலாளர்கள் பணி யாற்றுவார்கள் என்றும் அவர் கூறி யிருந்தார். ஆனால் வடகொரியா அரசு இந்த திட்டங்களை தொடங் குவதற்கு பதிலாக மோசமடைந்து வரும் பொருளாதார சூழ்நிலை மற்றும் உணவுப்பற்றாக்குறை ஆகிய வற்றில் கவனம் செலுத்தி வந்தது.

இந்த சூழலில் திடீர் திருப்பமாக வடகொரியா அணு சக்தி நடவடிக் கையில் தீவிரமாக இறங்கி இருப் பது உலக அளவில் கவனம் ஈர்ப்ப தாக அமைந்துள்ளது. வட கொரி யாவுடன் பேச்சுவார்த்தை நடத் தவே தாங்கள் விரும்புவதாக கூறி வரும் அமெரிக்க அரசுக்கு இது ஒரு புதிய தலைவலியாக இருக்கும் என பன்னாட்டு நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment