செவ்வாய்க் கோளில் பாறை துகள்கள் சேகரிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 11, 2021

செவ்வாய்க் கோளில் பாறை துகள்கள் சேகரிப்பு

வாசிங்டன், செப். 11- செவ்வாய்க் கோளில் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியங்கள் இருப்பதாக கருதப்படுவதால், இந்த கோளை ஆய்வு செய்வதில் உலக நாடுகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன. இந்நிலையில், இந்தாண்டு பிப்ரவரியில் அமெரிக்காவின் பெர்சவரன்ஸ் ரோவர்செவ்வாய்க் கோளில் வெற்றிகரமாக தரையிறங்கியது. அது, செவ்வாயின் பரப்புகளை பல்வேறு கோணங்களில் படம் பிடித்து அனுப்பி வருகிறது. ஆனால், இந்த ரோவரின் முக்கிய பணியே, செவ்வாய் கோளில் இருந்து பாறை, மண் துகள்களை சேகரித்து பூமிக்கு கொண்டு வருவதுதான்இந்நிலையில், பாறைகளை துளையிட்டு அதில் இருந்து துகள்களை சேகரிக்கும் அதன் முதல் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது

இது குறித்து நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பெர்சவரன்ஸ் ரோவரில் இணைக்கப்பட்டுள்ள ரோபோ கரத்தில், தரையை  துளையிடுவதற்கான கருவியும்,  துகள் களை சேகரிப்பதற்கான கருவிகளும் பொருத்தப்பட்டு உள்ளன. மேலும், இவ்வாறு சேகரிக்கப்பட்ட மண், பாறை துகள்களை பாதுகாப்பாக சேமித்து வைக்க 43 டைட்டா னியம் குழாய்களும் உள்ளன.

பாறையை துளையிட்டு துகள்களை சேகரிக்கும் பெர்சவரன்சின் முதல் முயற்சி தோல்வி அடைந்துள்ளது. பாறையை வெற்றிகரமாக துளையிட்ட அது, துகள்களை சேகரித்து குழாய்களில் அடைக்கும் முயற்சியில் தோல்வி அடைந்தது. இந்த பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,’ என கூறப்பட்டுள்ளது.

ஜப்பானில் அவசர நிலை பிரகடனம் நீட்டிப்பு

டோக்கியோ, செப். 11-  ஜப்பானில் சமீப காலமாக கரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. தற்போது அமலில் இருக்கும் அவசர நிலையானது, வரும் 12-ஆம் தேதியுடன் முடிவ டையவிருந்த நிலையில், இந்த ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், ஜப்பான் தலைநகர் டோக்கியோ மற்றும் 18 இதர பகுதிகளில் அறிவிக்கப்பட்ட அவசர நிலை பிரக டனம் செப்டம்பர் இறுதி வரை நீட்டித்து அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

கடந்த மே மாதம் ஜப்பானின் ஒகினாவா பகுதியில் அறிவிக்கப்பட்ட கரோனா கால ஊரடங்கு படிப்படியாக பல பகுதிகளுக்கு நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாக, ஜப்பான் பிரதமர் கூறுகையில், கரோனா பாதித்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டிருக்கும் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகமாகவே உள்ளது. பல மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் காலியாக இல்லை. எனவே, மக்கள் கரோனா பரவல் கட்டுப்பாடுகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment