புதுடில்லி, செப். 1-- கரோனா தொற்று பரவல் காரண மாக பன்னாட்டு பயணிகள் விமானப் போக்குவரத் துக்கு விதிக்கப்பட்டுள்ள தடை செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப் பட்டுள்ளது.
நாட்டில் கடந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் கரோனா தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கி யது. அதைத் தொடர்ந்து பன்னாட்டு விமானப் போக் குவரத்து சேவைகளுக்குத் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் நடப் பாண்டு மார்ச் மாதத்தில் கரோனா தொற்றின் 2ஆவது அலை பரவிய தைத் தொடர்ந்து பன்னாட்டு பயணிகள் விமான சேவைக்கான தடை தொடர்ந்து நீட்டிக் கப் பட்டது.
இத்தகைய சூழலில் உலக அளவில் கரோனா தொற்று பரவல் இன்னும் கட்டுக்குள் வராததால், பய ணிகள் விமான சேவைகள் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிப் பதாக விமானப் போக்குவ ரத்து இயக்குநரகம் அறிவித்துள்ளது. எனினும் சரக்கு விமானப் போக்குவ ரத்துக்கு எந்தத் தடையு மில்லை எனத் தெரிவித்துள்ள இயக்குநரகம், ஏர் பபுள் விதிகளின் அடிப் படையில் விமானங்கள் தொடர்ந்து இயக்கப் படும் என்றும் தெரிவித்து உள்ளது. ஏர் பபுள் விதி களைக் கடைப்பிடித்து அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், அய்க்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட 17 நாடுகளுக்கிடையே ஒப்பந்த அடிப்படையில் விமானங்கள் இயக்கப் பட்டு வருவது குறிப்பிடத் தக்கது.
No comments:
Post a Comment