வல்லம், செப்.2 தமிழ்நாடு அரசால் 01.09.2021ஆம் தேதி முதல் பள்ளிகள், கல்லூரிகள், மற்றும் பல்கலைக்கழகங்கள் திறப்பதற்கு அனுமதி அளித்ததனால் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலை பல்கலைக்கழகத்தில், செப்டம்பர் 1ஆம் தேதி முதல் மாணவர்களுக்கான நேரிடை வகுப்புகள் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு அரசின் கரோனா தடுப்பு வழிகாட்டுதல்களின் படி அனைத்து பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் கரோனா தடுப்பூசி கட்டாயம் செலுத்தி இருக்க வேண்டும் என்றும், அதற்கான சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து அந்ததந்த துறைத் தலைவர்களிடம் கொடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
மேலும், வகுப்புக்கு வருகின்ற மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுள்ளனர், அனைவரும் முக கவசம் அணிந்து இருந்தனர். பல்கலைக்கழக நுழைவு வாயிலில் அனைத்து மாணவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தர்மோ ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்து உள்ளே அனுமதிக்கப்பட்டது. மேலும் வகுப்பறைகள், விடுதிகள் மற்றும் பொது இடங்களில், கிருமி நாசினி தடுப்பு மூலம் சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டது. சமூக இடைவெளி விட்டு மாணவர்கள் வகுப்பறையில் அமர்ந்து இருந்தனர். மற்றும் சோப்பு உபயோகப்படுத்தி கை கழுவுவதற்கான வசதியையும் ஒவ்வொரு கட்டடத்திலும் செய்ய பட்டிருந்தது.
மேலும் மாணவர்கள் நீண்ட நாட்களுக்கு பிறகு வகுப்புகள் தொடங்கப்பட்டதால் மகிழ்ச்சியுடனும், ஆர்வத்துடனும் இருந்தனர்.
No comments:
Post a Comment