1, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பாயும் தாமிரபரணி ஆறு, தமிழ் இலக்கியங்களில் பொருநை ஆறு என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆதிச்சநல்லூர், கொற்கை, சிவகளை ஆகிய பகுதிகள் அடங்கிய பொருநை ஆற்றங்கரை நாகரீகம் 3,200 ஆண்டுகள் பழைமையானது என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
2. “தமிழர் பண்பாட்டின் வேர்களைத் தேடி இந்திய நாடெங்கும் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்படும்:
கேரளா - பட்டணம், ஆந்திரா - வேங்கி, கருநாடகா - தலைக்காடு, ஒடிசா - பாலூர் ஆகிய இடங்களில் ஆய்வுப்பணிகள் மேற்கொள்ளப்படும்.”- தமிழ்நாடு அரசு
3. உலகிலேயே முதன் முறையாக 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணியைத் தொடங்கியது - கியூபா அரசாங்கம்.
4. ஜாதியை ஒழிப்பதற்காக முன்னுதாரணமாக இருக்கும் கிராமத்திற்கு ரூ.10 இலட்சம் சிறப்பு தொகை பரிசாக வழங்கப்படும். - தமிழ்நாடு அரசு.
5. தமிழ், ஆங்கிலம், மலையாளம், கன்னடம், இந்தி என மொத்தம் 107 மொழிகள் பேசப்படும் ஒரே இந்திய நகரம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது - பெங்களூரு.
6 மாநகராட்சிகளின் பெயர்களும், அவை தொடங்கப்பட்ட ஆண்டும்.
1) மெட்ராஸ் (சென்னை) - 1688, 2) மதுரை - 1971, 3) கோவை - 1981, 4) திருச்சி - 1994, 5) சேலம் - 1995, 6) திருநெல்வேலி - 1995 7) வேலூர் - 2008, 8) ஈரோடு - 2008, 9) திருப்பூர் - 2008, 10) தூத்துக்குடி - 2008.
No comments:
Post a Comment