சென்னை, செப். 8- தந்தை பெரியாரின் பிறந்த நாளை சமூக நீதி நாளாக அறிவித்ததற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் சத்யராஜ் காட்சிப் பதிவு மூலம் நன்றி தெரிவித்துள்ளார். அந்தக் காட்சிப் பதிவில் கூறியிருப்பதாவது:-
"பிறப்பால் யாரும் உயர்ந்தவரும் இல்லை, தாழ்ந்தவரும் இல்லை என்று அறப்பால் தந்த அய்யாவின் கருத்தால் கவரப்பட்ட முத்தமிழ் அறிஞர் கலைஞரின் புதல்வருக்கு - பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் பிறந்தநாளை சமூக நீதி நாள் என்று அறிவித்த எங்கள் பெருமைமிகு முதலமைச் சருக்கு நன்றிகள்!" என்று குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment