மும்பை, செப். 1- கரோனா தாக்கம் காரண மாக இந்தியர்களில் பலர், தற்போதுள்ள வீட்டில் இருந்து, அளவில் பெரிய புதிய வீட்டிற்கு மாறுவதற்கு திட்டமிட் டிருப்பதாக ஆய்வில் தெரிய வந்து உள்ளது.
கரோனா தொற்று, மக்கள் மத்தியில் பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தி யுள்ளது. பொது முடக்க சூழலில் பலரும் வீட்டிலேயே இருப்பதால், பெரிய வசதியான, பாதுகாப்பு மிக்க வீட்டிற்கான தேவை அதிகரித்துள்ளது. இந்நிலையில், ‘நைட் பிராங்க்’ நிறுவனம் நடத்திய ஆய்வில், இந்தியர்களில் 26 சதவீதத்தினர் புதிய வீட்டிற்கு சென்றி ருப்பதும், 32 சதவீதத்தினர் அடுத்த ஓராண்டில் புதிய வீட்டிற்கு மாற திட்ட மிட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது. வீடு மாற திட்டமிட்டுள்ளவர்களில் பெரும் பாலானோர், புறநகர் பகுதி மற்றும் நண்பர்கள் அருகாமையை தேர்வு செய்வதாக தெரிவித்துள்ளனர். ஒரு சிலர், வேறு நகரங்களுக்கு குடி பெயரவும் திட்டமிட்டுள்ளனர். எதிர் கால பணி வாய்ப்புகள், குடியிருப்பு மற்றும் வர்த்தக சந்தையை தீர்மானிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியர்களில் கணிசமானோர், அனைத்து கட்டுப்பாடுகளும் விலக்கிக் கொள் ளப்பட்ட பின், அலுவலகம் சென்று பணியாற்ற விருப்பம் தெரிவித் துள்ளனர். வழக்குரைஞர்கள், மருத்துவர் கள், தணிக்கை யாளர்கள் மத்தியில் இந்த விருப்பம் அதிகமாக உள்ளது.
No comments:
Post a Comment