தந்தைபெரியார் பிறந்தநாளை சமூகநீதி நாள் என அறிவித்ததின் மகிழ்வாக தஞ்சையில் தந்தைபெரியார் சிலைக்கு மாலை அணிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 11, 2021

தந்தைபெரியார் பிறந்தநாளை சமூகநீதி நாள் என அறிவித்ததின் மகிழ்வாக தஞ்சையில் தந்தைபெரியார் சிலைக்கு மாலை அணிவிப்பு

தஞ்சை, செப்.11 தந்தைபெரியார் பிறந்தநாளை சமூகநீதி நாள் என அறிவித்ததின் மகிழ்வாக தஞ்சையில் தந்தைபெரியார் சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கப்பட்டது. அனைத்து கட்சியினர் பங்கேற்றனர்.

தந்தைபெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17 சமூகநீதி நாளாக அறிவித்த "சமூக நீதிக்கான சரித்திர நாயகர்" முதலமைச்சர் மு..ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்து மகிழ்ச்சியை வெளிபடுத்தும் வகையில் தஞ்சாவூரில் 07-09-2021 காலை 10 மணியளவில் பெரியார் சிலைக்கு அனைத்து கட்சி பொறுப்பாளர்கள் தோழர்கள் மாலை அணிவித்து இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர்

நிகழ்வில் கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன், மண்டலத் தலைவர் மு.அய்யனார், மாவட்டத் தலைவர் சி.அமர்சிங், மாநில பக தலைவர் மா.அழகிரிசாமி, மாநில கலைத்துறை செயலாளர் .சித்தார்த்தன், மாநில பக துணைத்தலைவர் கோபு.பழனிவேல், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் இரா.வெற்றிக்குமார், பெரியார் சமூக காப்பு அணி இயக்குநர் தே.பொய்யாமொழி, மாநில மாணவரணி அமைப்பாளர் இரா.செந்தூரபாண்டியன், மாநகரத் தலைவர் பா.நரேந்திரன், மண்டல மகளிரணி செயலாளர் .கலைச்செல்வி , தஞ்சை தெற்கு ஒன்றியத்தலைவர் .இராமலிங்கம், மாவட்ட துணைச் செயலாளர் சந்துரு மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் விஜயக்குமார், கழக பேச்சாளர்கள் இரா.பெரியார் செல்வன், பூவை. புலிகேசி, மாநகர அமைப்பாளர் செ. தமிழ் செல்வன், மாவட்ட . தலைவர் காமராஜ், சூரியமூர்த்தி, வல்லம் அழகிரி, . சாகரட்டீஸ், .பெரியார் செல்வன், ஆட்டோ ஏகாம்பரம், பழக்கடை கணேசன், இரமேஷ் உள்ளிட்ட திராவிடர் கழக தோழர்களும் அனைத்து கட்சியினர் காங்கிரஸ் கட்சி மாநகர்மாவட்டத் தலைவர் பி.ஜி.இராஜேந் திரன், மாவட்ட துணை தலைவர் வழகறிஞர் அன்பரசன், .தி.மு. மாவட்ட செயலாளர் வி. தமிழ்செல்வன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சொக்காரவி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில தொழிற்சங்க செயலாளர் சத்திரகுமார் இந்திய மாக்சிஸ்ட் கட்சி நகர செயலாளர் குருசாமி, விசிரிசா மியார், குடும்ப விளக்கு வேணுகோபால் உள்ளிட்ட ஏராளமான அனைத்து கட்சி தோழர்கள் காலத்து கொண்டனர்.

அனைத்து கட்சியாளர் முன்னிலையில் தஞ்சை பெரியார் சிலைகூண்டு அகற்றப்பட்டது.

No comments:

Post a Comment