ஆப்கானிஸ்தான் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறக்கூடாது அய்.நா.பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 2, 2021

ஆப்கானிஸ்தான் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறக்கூடாது அய்.நா.பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம்

நியூயார்க், செப். 2-- ஆப்கானிஸ்தான் நாடு முழுவதையும் கடந்த ஆகஸ்ட் 14-ஆம் தேதி தலிபான்கள் கைப்பற் றினர். இதையடுத்து, பல்வேறு நாட்டு மக்களை அவரவர் நாடு களுக்கு அனுப்பி வைக்கும் பணி யில் அமெரிக்க ராணுவம் ஈடுபட்டு வந்தது. இதன்படி, 31.8.2021 அன்று அமெரிக்க ராணுவத்தின் கடைசி வீரரும் ஆப்கானிஸ்தான் மண் ணில் இருந்து கிளம்பி தங்கள் தாயகம் சென்றார்.

அமெரிக்கா வெளியேறி விட் டாலும் மக்களுக்குத் தேவையான உதவிகளை அய்க்கிய நாடுகள் சபையின் மூலமாக செய்வோம் என அந்நாடு உறுதி அளித்தது.

இதற்கிடையே, ஆப்கானிஸ் தான் விவகாரம் தொடர்பாக அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் அய்.நா.பாதுகாப்பு கவுன்சிலில் தீர் மானம் ஒன்றை முன்மொழிந்தன. அந்த தீர்மானம், "எந்த ஒரு நாட் டையும் அச்சுறுத்துவதற்கு அல் லது தாக்குதல் நடத்துவதற்கு ஆப் கானிஸ்தான் பயன்படுத்தப்படக் கூடாது; அந்த நாட்டில் பயங்கர வாதிகளுக்கு புகலிடம் அளிக்கக் கூடாது" என வலியுறுத்தியது.

மேலும் "ஆப்கானிஸ்தானிலி ருந்து அனைத்து வெளிநாட்டினர் மற்றும் உள்நாட்டு மக்கள் பாது காப்பான மற்றும் ஒழுங்கான முறையில் வெளியேற தலிபான்கள் அனுமதிக்க வேண்டும்" எனவும் அந்த தீர்மானத்தில் வலியுறுத்தப் பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியாவின் தலைமையில் காணொலிக் காட்சி வாயிலாக நடந்த அய்.நா.பாது காப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்த தீர்மானத்தின் மீது ஓட்டெடுப்பு நடந்தது.

இதில் 13 நாடுகள் இந்தத் தீர் மானத்துக்கு ஆதரவாக வாக்களித் தன. எந்த ஒரு நாடும் தீர்மானத்துக்கு எதிராக வாக்களிக்கவில்லை. அதே வேளையில், நிரந்தர உறுப்பு நாடு களான ரஷ்யா மற்றும் சீனா இந்த வாக்கெடுப்பை புறக்கணித்தன. எனினும் 13 நாடுகள் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்ததால் தீர்மா னம் வெற்றிகரமாக நிறைவேறியது.

No comments:

Post a Comment