கரோனா நீண்ட காலத்துக்கு பரவும் - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 30, 2021

கரோனா நீண்ட காலத்துக்கு பரவும் - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

புதுடில்லி, செப்.30 கரோனா நீண்ட காலத்துக்கு பரவும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

உலக சுகாதார அமைப்பின் தென் கிழக்கு ஆசிய பிராந்தியத்தின் இயக்குநர் பூனம் கேத்ரபால் சிங் டில்லியில்  28.9.2021 அன்று கூறியதாவது:-

கரோனா வைரஸ் நீண்டகாலத்துக்கு தொடர்ந்து பரவும். தடுப்பூசி மற்றும் முந்தைய தொற்று பாதிப்பு ஆகியவைதான் கரோனா நீண்ட காலத்துக்கு தொற்று நோயாக இருக்குமா என்பதை தீர்மானிக்கும். நாம் கரோனா வைரஸ் தொற்றை முற்றிலும் கட்டுப்படுத்துகிறோம். வைரஸ் நம்மை கட்டுப்படுத்தாது.

கரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள், தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோருக்கு எதிர்காலத்தில் தொற்று தாக்கத்துக்கு வாய்ப்பு குறைவு. கரோனா தொற்று ஒழிந்து போவதற்கான வாய்ப்பு இல்லை.

தொற்றுநோயால் ஏற்படுகிற இறப்புகள், மருத்துவமனை சேர்க்கை, துயரம், சமூக பொருளாதார மற்றும் சுகாதார இழப்பை தடுக்க வேண்டும் அல்லது குறைக்க வேண்டும். கரோனாவுக்கு எதிரான பாதுகாப்பு அம்சம் உலகளவில் குறைவாகவே இருக்கிறது. எனவே பெரும்பாலான மக்களுக்கு தொற்று பரவ வாய்ப்பு இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment