ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க தூதரகம் கத்தாருக்கு மாற்றம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 1, 2021

ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க தூதரகம் கத்தாருக்கு மாற்றம்

வாசிங்டன், செப். 1- ஆப்கானிஸ்தான் நாட்டில் அரசுக்கு எதிரான நீண்டகால போரில் தலிபான் பயங்கரவாதிகள் வசம் ஆட்சி அதிகாரம் முழுமையாக சென் றுள்ளதுஇதனை முன்னிட்டு ஆப்கானிஸ்தானில் சிக்கியி ருந்த தங்கள் நாட்டு குடிமக் களை வெளியேற்றும் பணியில் அமெரிக்கா, இந்தியா, இங்கி லாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகள் செயல்பட்டன.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் முழுவ தும் ஆகஸ்டு 31ஆம் தேதியுடன் திரும்பப் பெறப் படும் என அதிபர் ஜோ பைடன் முன்பே அறிவிப்பு வெளியிட்டார்.

இதன்படி, ஆப்கானிஸ்தா னில் இருந்து 20 ஆண்டுகளுக்கு பின் அமெரிக்க படைகள் முழு வதும் திரும்பப் பெறப்பட்டு உள்ளன.  காபூலில் இருந்து, கடைசி அமெரிக்க வீரர் வெளி யேறும் ஒளிப்படம் ஒன்றும் வெளியிடப்பட்டு உள்ளது.

அமெரிக்க படைவெளி யேறிய நிலையில், அதனை கொண்டாடும் வகையில் தலிபான்கள் வானை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டு மகிழ்ச் சியை வெளிப்படுத்தி உள்ள னர்.

ஆப்கானிஸ்தானில் இருந்து படைகள் திரும்பப் பெற்றது பற்றி அமெரிக்க மக்களிடம் அதிபர் பைடன் பேசினார்.  இந்த நிலையில், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் கூறும் போது, ஆப்கானிஸ்தானில் உள்ள தூதரக நடவடிக்கைகள் ரத்து செய்யப்படுகின்றன.

அதற்கு பதிலாக கத்தார் நாட்டில் உள்ள தோகா நக ருக்கு அமெரிக்க தூதரகம் மாற்றப்படுகிறது.  இதுபற்றி முறைப்படி நாடாளுமன்றத் தில் அறிவிக்கப்படும்.  ஆப்கா னிஸ்தானில் பாதுகாப்பு சூழல் மற்றும்  அரசியல் நிலைமை நிச்சயமற்ற நிலையில் எதிர் கால நலனை முன்னிட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியம் என்று கூறியுள்ளார்.

அமெரிக்க படைகள் வெளியேற்றம்; தலிபான்கள் கொண்டாட்டம்

அமெரிக்க பாதுகாப்பு துறை வெளியிட்ட செய்தியில், காபூலில் அமெரிக்க படைக ளின் நடவடிக்கை முடிந்ததன் அடையாளமாக, கடைசி அமெரிக்க வீரராக மேஜர் ஜெனரல் கிறிஸ் டோனாஹியூ சி-17 ரக விமானம் ஒன்றில் புறப்பட்டு உள்ளார் என தெரிவித்தது. அவர் ஆயுதங்களுடன், ராணுவ சீருடை அணிந்து வெளியேறும் ஒளிப்படம் ஒன் றையும் வெளியிட்டு இருந்தது.

இதை தொடர்ந்து தலி பான்கள்  விமான நிலையத்திற் குள் நுழைந்து பல இராணுவ ஹெலிகாப்டர்கள் மற்றும் அமெரிக்காவால் விட்டுச் செல்லப்பட்ட விமானங்களை ஆய்வு செய்தனர்.

தலிபான்கள் அமெரிக்கப் படைகளை நாட்டை விட்டு சென்றதைவரலாற்று தருணம்என்று பாராட்டி, நாடு இப் போதுமுழு சுதந்திரம்பெற்று உள்ளது என்று கொண்டாடி வருகின்றனர். ஆப்கானிஸ் தானின் தலைநகர் காபூலில்  தலிபான்கள்  தங்கள் துப்பாக்கி களை வானில் வீசி கொண்டா டினர். ஆங்காங்கே பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.

No comments:

Post a Comment