நம் நா இனிப்
பேசுவதெல்லாம்
பெரியார் உலகமே!
எம் மூச்சு இனிப்
பாடுவதெல்லாம்
பெரியார் உலகமே!
நம் கை மட்டும்
என்ன இளைத்ததா?
எழுது வதெல்லாம் இனிப்
பெரியார் உலகமே!
எம் கண்கள் எல்லாம்
எதையோ தேடுகின்றன
சிறுகனூர் வரை சென்று
ஒரு நோட்டமிட்டு விட்டு
வந்து சேர்கின்றன
நாளும் நாளும்!
இந்த வாழ்வும் வளமும்
எங்கிருந்து குதித்ததாம்?
இந்தப் படிப்பும் பவிசும்
எந்தக் கடையில் கிடைத்ததாம்?
நம் பாட்டன் முதுகு
வளைந்தது
நம் முதுகு மட்டும்
நிமிர்ந்தது எப்படி?
எல்லா மிந்த
ஈரோட்டுக் கிழவரின்
கைத்தடியின்
‘கடாட்சம்!'
தொண்டின் மழையால்
கிடைத்திட்ட சுபிட்சம்!
அவர் பெயரால்
‘‘பெரியார் உலகம்''
உருவாக்கம்!
இனிவரும் உலகிற்குச்
சேமிப்பின் தேக்கம்!
அடடே, அதற்கு
இல்லாத பணம்
இருந்து என்ன பயன்
நம் வீட்டில்?
வீட்டுக்கு வீடு
செல்லுவோம்!
நாம் வந்த காரணத்தையும்
சொல்லுவோம்!
தாண்டிக் குதித்துத்
தாவி யணைத்துத்
தருவார் நிதியினை!
நன்றிக் கண்ணீர்
காய்ந்தா விட்டது?
கால்கள் எல்லாம்
முடங்கியா போனது?
கடமையின் கம்பீரத்தை
நம் நடத்தையில்
காட்டுவோம்!
வற்றா நன்றிப்
பெருக்கின்
உச்சியில்பூத்த
வாடா மலர்களே!
செல்லுவோம் -
வெல்லுவோம்!
வாரீர்! வாரீர்!!
- கவிஞர் கலி.பூங்குன்றன்
No comments:
Post a Comment