ஜவ்வரிசி தொழில் மூலம் சேலம் மாவட்டத்தை பன்னாட்டு அளவிற்கு உயர்த்துவதே அரசின் குறிக்கோள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 30, 2021

ஜவ்வரிசி தொழில் மூலம் சேலம் மாவட்டத்தை பன்னாட்டு அளவிற்கு உயர்த்துவதே அரசின் குறிக்கோள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை, செப்.30 ஜவ்வரிசி தொழில் மூலம் சேலம் மாவட்டத்தை பன்னாட்டு அளவுக்கு உயர்த்துவதே குறிக்கோள்என்று முதலமைச்சர் மு..ஸ்டாலின் பேசினார்.

சேலம் மாவட்டம், சேலம் ஸ்டார்ச் சேகோ உற்பத்தியாளர்கள் சேவை தொழிற் கூட்டுறவு சங்கம் லிமிடெட் (சேகோசர்வ்) வளாகத்தில் ரூ.1 கோடியே 26 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மின்னணு ஏல மய்யம் மற்றும் தமிழ்நாடு புத்தாக்க திட்டத்தின் கீழ் ரூ.33 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பீட்டில் ஜவ்வரிசியின் ஊட்டச்சத்து மதிப்பு, பயன்கள் மற்றும் விற்பனையை மேம்படுத்த புதிதாக கட்டப்பட்டுள்ள நேரடி விற்பனை முனையக் கட்டடம் ஆகியவற்றை முதலமைச்சர் மு..ஸ்டாலின் நேற்று (29.9.2021) திறந்து வைத்தார்.

அதனைத்தொடர்ந்து, மரவள்ளி விவசாயிகள் மற்றும் ஜவ்வரிசி உற்பத்தி நிறுவன பிரதிநிதிகளுடனான கலந்துரை யாடல் கூட்டத்தில் கலந்துகொண்டு முதலமைச்சர் மு..ஸ்டாலின் பேசிய தாவது:-

தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் நடந்ததற்குப் பிறகு கடந்த 4 மாதங்களில் பல்வேறு திட்டங்களை, குறிப்பாக சொல்லவேண்டும் என்றால், தேர்தலுக்கு முன்பு மக்களை சந்தித்து வாக்கு கேட்ட போது நாங்கள் வாக்குறுதி கொடுத்தோம், தேர்தல் அறிக்கையாக அச்சிட்டு அதை புத்தகமாக வெளியிட்டிருக்கிறோம்.

500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை வழங்கினோம். அதில் கிட்டத்தட்ட 200-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை நிறை வேற்றி முடித்திருக்கிறோம் என்பதை பெருமையோடு நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

ஜவ்வரிசி உற்பத்தியாளர்களுடைய கோரிக்கையை ஏற்று புதிய சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்படும் என்று சட்டமன்றத்தில் நாம் ஏற்கெனவே அறிவித்திருக்கிறோம். ஜவ்வரிசி உணவு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உற்பத்தியாளர்களுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கை யையும் நீங்கள் ஏற்கெனவே வைத்திருக் கிறீர்கள், அதையும் தாண்டி, கலப் படத்தை தடுக்க, கண்காணிக்க ஒரு குழு அமைக்கப்பட வேண்டும், பொது மக்களுக்கு நியாயமான விலையில் அதுதரப்பட வேண்டும் எனவும் சொல்லியிருக்கிறோம்.

இந்த கோரிக்கைகளை எல்லாம் நிச்சயமாக படிப்படியாக நிறைவேற்றப் படும் என்ற உறுதியை நான் முதலில் உங்களுக்கு தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

ரூ.1.93 லட்சம் கோடி ஏற்றுமதியுடன், இந்தியாவிலேயே, தமிழ்நாடு 3ஆவது பெரிய ஏற்றுமதி மாநிலமாக விளங்கி கொண்டிக்கிறது. இதை 3ஆவது இடத்தில் இருந்து முதல் இடத்திற்கு கொண்டுவருவதுதான் இந்த ஆட்சியின் லட்சியமாக அமைந்திருக்கிறது.

அதற்காக தமிழ்நாடு ஏற்றுமதி மேம்பாட்டு கொள்கையை வெளியிட்டிருக்கிறோம்.

மாநில ஏற்றுமதி மேம்பாட்டுக்குழு அமைக்கப்பட்டிருக்கிறது. சிறு, குறு மற்றும் நடுத்தர ஏற்றுமதி நிறுவன கையேட்டையும் வெளியிட்டிருக் கிறோம். திருப்பூர், கரூர், மதுரை, ஆம்பூர், தூத்துக்குடி, பொள்ளாச்சி, காஞ்சிபுரம், சென்னை, கோவை மற்றும் ஓசூர் ஆகிய 10 ஏற்றுமதி மய்யங்கள் மேம்படுத்தப்பட இருக்கின்றன.

ஜவ்வரிசி தொழிலைப் பொறுத்த வரை, இந்தியாவிலேயே முன்னோடியாக விளங்கக்கூடிய சேலம் மாவட்டத்தை பன்னாட்டு அளவிற்கு உயர்த்த வேண்டும் என்பதுதான் நம்முடைய அரசினுடைய குறிக்கோள்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில், ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், மருத் துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டனர்.

மேற்கண்ட தகவல் தமிழ்நாடு அர சின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஆத்தூர் ஆர்.டி.. அலுவலக கட்ட டம் உள்பட ரூ.32 கோடி மதிப்பிலான 29 முடிவுற்ற திட்டங்களையும் முதல மைச்சர் மு.. ஸ்டாலின் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.

No comments:

Post a Comment