மும்பை, செப். 30- டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்தின் யாரிஸ் செடான் மாடல் விற்பனை இந்தியாவில் நிறுத்தப்பட்டது. யாரிஸ் மாடலுக்கு மாற்றாக மாருதி சுசுகி சியாஸ் மாடலை தழுவி உருவாகும் புதிய கார் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த கார் பெல்டா எனும் பெயரில் விற்பனைக்கு வருகிறது.
யாரிஸ் மாடலை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து டொயோட்டா அதிகாரப்பூர்வ சர்வீஸ் மற்றும் உதிரிபாகங்கள் குறைந்தபட்சம் பத்து ஆண்டுகளுக்கு கிடைக்கும்.
"செப்டம்பர் 27, 2021 முதல் யாரிஸ் மாடல் இந்திய விற் பனையை நிறுத்துகிறோம். வாடிக்கையாளர்கள் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட வாகனங்களை அறிமுகம் செய்யும் டொயோட்டா நிறுவன திட்டத்தின் அங்கமாக இந்த முடிவு எடுக்கப் பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் எங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கை மற்றும் தொடர்ச்சியான ஆதரவுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம்," என டொயோட்டா வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
No comments:
Post a Comment