ஏற்கெனவே மிகுந்த ஆபத்தான வேலையைச் செய்யும் ரோபோக்களை டெஸ்லா தயாரித்து, லட்சக்கணக்கில் விற்று வருகிறது. அவைதான், தானோட்டித் திறமை உள்ள டெஸ்லா கார்கள். எனவே, அடுத்த கட்டமாக ஹியூமனாய்டு எனப்படும் மனித வடிவ ரோபோவை தயாரிப்போம் என, டெஸ்லாவின் நிறுவனர் எலான் மஸ்க் அறிவித்ததில் வியப்பில்லை.
'டெஸ்லா பாட்' என்று அழைக்கப்படும் அந்த ரோபோ, மனிதர்களுக்காக கட்டமைக்கப்பட்ட உலகில் மனிதர்களின் எடுபிடியாக செயல்படும் என்று மஸ்க் அறிவித்துள்ளார். ஆபத்தான பணிகள், திரும்பத் திரும்பச் செய்ய வேண்டிய வேலைகள் மற்றும் போரடிக்கும் காரியங்களைச் செய்யவே டெஸ்லா பாட் உருவாக்கப்படுவதாக ஊடகவியலாளர் கூட்டத்தில் மஸ்க் விளக்கினார். இந்த ரோபோவிடமிருந்து மனிதர்களால் எளிதாக தப்பி ஓட முடியும் என்றும், ஒரு ஆளே கூட இந்த ரோபோவை அடக்கிவிட முடியும் என்றும் மஸ்க் தெரிவித்தார்.
டெஸ்லா நிறுவனம் ஆண்டுதோறும் கொண்டாடும் 'செயற்கை நுண்ணறிவு நாள்' அன்று ரோபோவின் மாதிரியை அறிமுகப்படுத்தி இருப்பது, பாஸ்டன் டைனமிக்ஸ் தயாரிக்கும் அட்லஸ் ரோபோ, 'சார்ப்பட்டா' வேம்புலி போல இருக்கிறது. எனவே, டான்சிங் ரோஸ் போல காண்போரை கவரும் ரோபோவை களத்தில் இறக்கி விட நினைக்கிறார் மஸ்க்.
No comments:
Post a Comment