கஜா புயலால் பாதிக்கப்பட்டோருக்கு வீடுகள் - தமிழ்நாடு அரசு தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 3, 2021

கஜா புயலால் பாதிக்கப்பட்டோருக்கு வீடுகள் - தமிழ்நாடு அரசு தகவல்

சென்னை, செப். 3- கஜா புயலால் பாதிக்கப்பட் டோருக்கு வீடுகள் வழங் குவது குறித்து தமிழ்நாடு சட்டப் பேரவையில் அமைச்சர் தா.மோ.அன்ப ரசன் தாக்கல் செய்த குடி சைப் பகுதி மாற்றுவாரிய துறையின் கொள்கை விளக்க குறிப்பில் கூறப் பட்டு இருப்பதாவது:-

தமிழ்நாட்டின் கட லோர மாவட்டங்களில் வாழும் ஏழை குடும்பங் கள் கடந்த 2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வீசிய கஜா புயலால் பெரிதும் பாதிக்கப்பட்ட னர். கஜா புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங் களுக்கு 12 ஆயிரத்து 752 அடுக்குமாடி குடியிருப்பு கள் மற்றும் 9 ஆயிரத்து 48 தனி வீடுகளை ரூ.1,610 கோடி மதிப்பில் கட்ட தமிழ்நாடு அரசு திட்ட மிட்டுள்ளது.

இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக 5 ஆயிரத்து 396 அடுக்குமாடி குடியிருப் புகள் 562 கோடி ரூபாய் மதிப்பில் கட்ட ஒன்றிய அரசின் ஒப்புதல் பெறப் பட்டுள்ளது. அவற்றில் 2 ஆயிரத்து 876 அடுக்கு மாடி குடியிருப்புகளுக் கான பணிகள் தொடங் கப்பட்டு முன்னேற்றத்தில் உள்ளன. மேலும் 1,692 தனி வீடுகளுக்கான பணி கள் தொடங்கப்பட்டு அவற்றில் 569 வீடுகள் முடிவுற்றுள்ளன. மீத முள்ள 1,123 வீடுகளுக்கான பணிகள் பல்வேறு நிலை களில் இருக்கின்றன.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

No comments:

Post a Comment