மதுரை, செப். 8- போதையில் நண்பரை மது பாட்டி லால் குத்திய வழக்கில் கைதான இளைஞர்க ளுக்கு இனிமேல் குடிக்க மாட்டோம் எனப் பிர மாணப் பத்திரம் தாக்கல் செய்தால் பிணை வழங்கு வதாக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. திருச் சியைச் சேர்ந்தவர்கள் சிவா, கார்த்திக். நண்பரை மது பாட்டிலால் குத்திய வழக்கில் இவர்களை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத் தனர். இந்த வழக்கில் பிணை கோரி இருவரும் உயர் நீதிமன்றக் கிளை யில் மனு தாக்கல் செய்த னர்.
அதில், நண்பர்கள் சுரேஷ், பாண்டியன் ஆகி யோருடன் சேர்ந்து மது அருந்தினோம். அப்போது எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில்பீர் பாட்டிலால் சுரேஷை குத்தியதாக எங்களை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கு பொய் வழக்கு. எண்ணிக் கைக் காக எங்கள் மீது வழக்குப் பதிவு செய்துள் ளனர். எனவே, பிணை வழங்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி பி.புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந் தது. அப்போது நீதிபதி, "மது அருந்தியதுதான் பிரச் சினைக்கு காரணமாகும். மனுதாரர்கள் இருவரும் இனிமேல் மது குடிக்க மாட்டோம் எனப் பிர மாணப் பத்திரம் தாக்கல் செய்தால் பிணை வழங் குவது குறித்து பரிசீலிக்கப் படும்" என்று கூறி வழக் கின் விசாரணையை செப். 13ஆம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment