தமிழனாகப் பிறந்த ஒரு குற்றத்துக்காக வ.உ.சி.யின் தியாகம் மறைக்கப்பட்டுள்ளது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 8, 2021

தமிழனாகப் பிறந்த ஒரு குற்றத்துக்காக வ.உ.சி.யின் தியாகம் மறைக்கப்பட்டுள்ளது

தந்தை பெரியார் கருத்தை எடுத்துக்காட்டி தமிழர் தலைவர் உரை

சென்னை, செப். 8  தமிழனாகப் பிறந்த ஒரு குற்றத்துக்காக ..சி.யின் தியாகம் மறைக்கப்பட்டுள்ளது என்ற தந்தை பெரியார் கருத்தை எடுத்துக்காட்டினார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

‘‘..சிதம்பரனாரும் - தந்தை பெரியாரும்!''

..சி.யின் 149 ஆம் பிறந்தநாளில், அவரது தியாகத்தை நினைவுகூரும் விதமாக, 5.9.2020 அன்று மாலை 6 மணிக்கு, “..சிதம்பரனாரும், தந்தை பெரியாரும்எனும் தலைப்பில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் காணொலிமூலம் சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

‘‘வீர திராவிடர் ..சி.யின் மனித பக்தி''

ஆகவே, 1926 ஆம் ஆண்டிலே நீதிக்கட்சி மாநாட்டில் கலந்துகொண்டிருக்கிறார்.

ஞானசூரியன்' போன்ற புத்தகங்களை, சுயமரியாதை இயக்க புத்தகங்களை வெளியிடுகிறார் அவர். சமூக நீதியை மட்டும் ஆதரிக்கவில்லை ..சி. அவர்கள், மூடநம்பிக்கைகளை எதிர்த்து, சுயமரியாதை இயக்கத் தினுடைய தத்துவத்திற்கே மிகப்பெரிய அளவிலே வரக்கூடியது - சரியான வாய்ப்பைப் பெறக்கூடியது எது என்று சொன்னால் நண்பர்களே, உங்களுக்குச் சுட்டிக் காட்ட வேண்டுமானால், ‘ஞானசூரியன்' நூல்! அந்த வாய்ப்புகளைப் அவர்கள் பெற்றிருக்கிறார்கள் என்ப தற்கு அடையாளம் - நானே தலையங்கத்தை மிகத் தெளிவாக சிறப்பாக அதைச் சுட்டிக்காட்டி 1972 இல் - அவருடைய நூற்றாண்டு விழாவையொட்டி ‘‘வீர திராவிடர் ..சி.யின் மனித பக்தி'' என்ற தலைப்பில் எழுதியிருக்கிறேன்.

அதில் ..சி. அவர்கள் சுயமரியாதைக் கருத்துகளில் ஒன்றியிருந்தார்கள் என்பதற்கு அடையாளமாக இரண்டு, மூன்று செய்திகளை மிகத் தெளிவாகச் சொல்லி யிருக்கிறோம்.

சேலம் ஜில்லா மூன்றாவது அரசியல் மாநாடு

1926 இல் மதுரையில் நடைபெற்ற மாநாட்டில் ..சி. கலந்துகொண்டார். அதற்கடுத்து நண்பர்களே, 5.11.1927 இல் சேலத்தில் ஒரு மாநாடு. சேலம் ஜில்லா மூன்றாவது அரசியல் மாநாடு என்ற தலைப்பில் அந்த மாநாடு நடைபெற்றது.

அந்த மாநாட்டிற்குத் தலைமை வகித்துப் பேசுகிறார்.

5.11.1927 இல் சேலம் மாவட்டம் மூன்றாவது அரசியல் மாநாட்டில் தலைமை வகித்துப் பேசுவதற்காக  52 பக்கங்களில் தலைமை உரையை அச்சிட்டுக் கொண்டு வருகிறார். கோவில்பட்டி சரசுவதி பிரசில் அச்சிடப் பட்டது. சிகப்பு அட்டையை உடையது.

அப்பேச்சில் அவர் மேலும் சில முக்கிய பகுதிகளை நமது வாசகர்களுக்கு மிகத் தெளிவாக எடுத்துச் சொல்லுகிறார்.

அப்படி சொல்லுகிறபொழுது,

சுயமரியாதை இயக்கத்தினுடைய பெருமைகளைப் பற்றி சொல்லுகிறபொழுது, எப்படியெல்லாம் சொல்கிறார் என்பதைப் பாருங்கள். அதாவது யாரும் சொல்லாத கருத்துகளை சொல்கிறார்.

தந்தை பெரியார் பேசுகிறார்!

மற்றவர்களை புழு போல மதித்த ஆரியத்தின் கொடுமைகளைச் சுட்டிக்காட்டி அவர் எவ்வளவு மனிதநேயத்தோடு சொல்கிறார் என்பதைப் பாருங்கள்.

‘‘பிராமணரல்லாதார்களாகிய தமிழர்களின் முன்னோர்கள் பிராமணர்களின் முன்னோர் களாகிய ஆரியர்களை மிலேச்சர் என்றும், யாகத்தின் பெயரால் கண்டவற்றையெல்லாம் தின்பவர்களென்றும், நினைத்தவற்றையெல்லாம் செய்பவர்களென்றும், சொல்லியும், நிகண்டு முதலிய நூல்களில் எழுதி வைத்தும், அவர்களைத் தொடாமலும், அவர்கள் தொட்ட பொருள்களைக் கொள்ளாமலும், அவர்களைத் தொட நேர்ந்த போது குளித்தும் அவர்களை இழிவுபடுத்தி வந்தார்கள். அவ்விழிவை ஒழிப்பதற்கு வழி என்ன என்று அவ்வாரியர்கள் ஆலோசனை செய்தார்கள். உடனே தங்களைப் பிராமணர்கள் என்றும், மற்றைத் தமிழர்களெல்லாம் சூத்திரர்கள் என்றும், சொல்லவும் எழுதவும் தலைப்பட்டார்கள். அவ்வாறு தாங்கள் மேலான ஜாதியார் என்றும், தமிழர்களெல்லாம் கீழான ஜாதியார் என்றும் நடத்தையிலும் காட்டினார்கள்.

அந்த மருந்தையே தமிழர்கள் கைக்கொள்ளின் அவர்களுக்கு இப்போது ஏற்பட்டிருக்கிற நோய் நீங்கிப்போம். அதாவது, பிராமணரல்லாத ஜாதியார் களில் ஒவ்வொருவரும் தாம் பிராமணருக்கு மேற் பட்ட ஜாதியாரென்று கருதிப் பிராமணர் மற்றை ஜாதியார்களை நடத்துகிறது போல் பிராமணர்களை நடத்தி வருவாராயின் தம் ஆரோப இழிவு நோய் போய்விடும். இந்நோய் முதலைப் போக்குவதற்கு வேறு மருந்து தேட வேண்டியதில்லை.''

மேலும் அவர் தொடர்கிறார்,

‘‘ராஜாங்க உத்தியோகங்களும்,  ஸ்தல ஸ்தாபன உத்தியோகங்களும், பொது ஸ்தாபன உத்தியோ கங்களும், நமது தேசத்திலுள்ள ஒவ்வொரு ஜாதி யாருக்கும், அந்தந்த ஜாதியாரின் எண்ணிக்கை விகிதப்படி பகிர்ந்து கொடுக்கப்பட்டாலன்றி, நம் தேசத்தாரில் ஒற்றுமை உண்டாகப் போவதே இல்லை என்பதும், நமக்குள் ஒற்றுமை உண்டா காமல், நாம் உண்மையான சுயாட்சியை அடையப் போவதே இல்லை என்பதும், மனித அறிவுடைய எவருக்கும் தெளிவாக விளங்கத்தக்கவை. இவ் வுண்மைக்கு மாறாகப் போவோர் யாவராயினும் மனித அறிவில்லாதவர்.''

மேற்காட்டிய இரண்டு பகுதிகளிலும் அவரது தலைமை உரை நூலில், 39, 40, 50 ஆகிய மூன்று பக்கங்களில் உள்ளதாகும்.

அதுமட்டுமல்லாமல், அவர் மேலும் சொல்கிறார்,

‘‘தாங்கள் மேலான ஜாதியார் என்று கொண்ட கொள்கை அழியாது இருக்கும் பொருட்டு பிராம ணர்கள் மற்ற ஜாதியார்களுக்கு விடுத்த அபராத தண்டனையை மாற்றிக் கொள்ளுவதற்குரிய அதி காரம், பிராமணரல்லாதார் கையிலேயே இருக் கிறது என்பதைக் கண்டுபிடித்தது திருவாளர் .வெ.ராமசாமி நாயக்கர் அவர்கள்.

பிராமணரல்லாதார்களுக்குக் கூறி, அதனை உபயோகிக்கும்படி செய்துகொண்டு வருகிறார்கள். அவ்வதிகாரத்தை பிராமணரல்லாதவர்கள் ஊக் கத்துடன் உறுதியாகச் செலுத்தி, தங்கள் அபராத தண்டனையை மாற்றிக் கொள்வார்கள் என்று நம்புகிறேன்.''

எவ்வளவு உருவகப்படுத்தி, அதை மாற்றக்கூடிய தகுதியும், ஆற்றலும் தந்தை பெரியாருக்கே உண்டு என்று ..சி. அவர்கள் சொல்கிறார், எப்பொழுது சொல்கிறார் என்றால், 1927 இல் சொல்கிறார்.

மதுரை மாநாட்டில் கலந்துகொண்டு, பார்ப்பனரல்லாத மக்களுக்குப் பக்கபலமாக இருக்கிறார்.

அடுத்த ஆண்டு சேலத்தில் நடைபெற்ற மாநாட்டிலும் பங்கேற்று தலைமை உரை ஆற்றியிருக்கிறார் ..சி. அவர்கள்.

அதற்கடுத்து நண்பர்களே, நாகப்பட்டினத்தில், கோவில்பட்டியில் நிகழ்ச்சிகள் மிகப்பெரிய அளவிற்கு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. நாகையில், பெரியார் அவர்களின் படத்தினை, ..சி. அவர்கள் திறந்து வைக்கிறார்.

இவர்தான் நமக்கு வழிகாட்டி; இவருடைய பங்கு இல்லையானால், நாம் விடுதலை பெறவே வாய்ப்பு கிடையாது

ஊர்வலம் நடைபெறுகிறது. பெரியார் பிறகு வந்து கலந்துகொள்கிறார். அதில் அந்நிகழ்ச்சியில் என்ன சொல்கிறார் என்றால், ‘‘இந்தப் படத்தைத் திறந்து வைத்தது மட்டுமல்ல, இந்தத் தலைவர்தான் மிகவும் முக்கியமானவர். இவரை, காலையில் ஒருமுறை, மதியம் ஒருமுறை, இரவில் ஒருமுறை வணங்கவேண்டும். ஏனென்றால், இவர்தான் நமக்கு வழிகாட்டி. இவருடைய பங்கு இல்லையானால், நாம் விடுதலை பெறவே வாய்ப்பு கிடையாது.''

இப்படி எடுத்துச் சொல்லக்கூடிய அளவிற்கு, தந்தை பெரியாரை அவ்வளவு புகழுகிறார். பெரியாருடைய தொண்டை அவர்கள் தெளிவாக உணர்ந்தார்கள்.

சமூகநீதியில் பெரியார் ஒருவர் இல்லையானால், ஆரியத்தின் மிகப்பெரிய கொடுமையை சந்தித்து, மக்கள் இயக்கத்தை நடத்தி, அதனை அசைத்துக் காட்டி யிருக்க முடியாது. எவ்வளவு பெரிய தியாகத்தைச் செய்திருக்கிறார்கள் என்பதை எண்ணிப் பாருங்கள்.

ஜாதி சிமிழுக்குள் அடைக்கலாம் என்று நினைக்கிறார்கள்

இதனால்தான் நண்பர்களே, ..சி.யை இருட்டடித் தார்கள். ..சி.யைப்பற்றி சொல்லும்பொழுது கப் பலோட்டிய தமிழன் என்று மட்டும் சொல்கிறார்கள். இன்னுங்கேட்டால், இன்றைக்கு எந்த அளவிற்குப் போய்விட்டார்கள் என்றால், மிக வருத்தத்தோடு சொல்லவேண்டிய செய்தி, ..சி.யை ஒரு ஜாதி சங்கத் தலைவர் போன்று ஆக்கி, அவருக்கு அந்த வகையில் முக்கியத்துவம் கொடுத்து, பாராட்டி அவரை ஜாதி சிமிழுக்குள் அடைக்கலாம் என்று நினைக்கிறார்கள்.

அவர் இந்திய நாட்டிலேயே ஒப்பாரும் மிக்காரும் இல்லாத ஒரு தியாகம் செய்தவர். அவருடைய தியா கத்தை தன்னல மறுப்பை நினைத்தால் நாம் கண்ணீர் விடும் நிலை வரும்.

நண்பர்களே, நாங்கள் மிசாவில் கைதாகி, சிறைச் சாலையில் ஒரு மாதம் வரையில் அடைபட்டு, எல்லா சங்கடங்களையும் அனுபவித்து - நிலைமை கொஞ்சம் சரியானபொழுது, எங்களை வேறு ஒருசெல்'லுக்கு மாற்றினார்கள்.

அந்த நேரத்தில்கூட, ஓர் அறையில், நான்கு பேர் அடைக்கப்பட்டு இருந்தோம். மாரிசாமி போன்றவர்கள் எங்களோடு இருந்தார்கள்.

புத்தகங்கள் வேண்டுமானால் நீங்கள் படிக்கலாம் என்று எங்களிடம் சொன்னார்கள். சிறைச்சாலையில் நூலகம் இருப்பது அப்பொழுதுதான் எங்களுக்குத் தெரிந்தது.

அந்த நூலகத்திலிருந்து ..சி. அவர்கள் எழுதிய சுயசரிதையைப் படித்தேன். அதுதான் நான் சிறைச் சாலையில் படித்த முதல் புத்தகம்.

எவ்வளவு சங்கடங்கள், எவ்வளவு துன்பங்கள், எவ்வளவு அடக்குமுறைகள் - அதையெல்லாம் எதிர்த்து அவர்கள் சுயமரியாதையோடு - வெள்ளைக்கார அதிகாரிகள் என்ன திமிரா என்று கேட்டவுடன், ஆம் என்று சொல்கிறார்.

..சி. போன்று  யாராவது ஒருவர் பாடுபட்டு இருக் கிறார்களா? இதைத்தான் தந்தை பெரியார் கேட்கிறார்.

எந்த அளவிற்குத் தந்தை பெரியார் அவர்கள் சொல் கிறார் என்பதை நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும்.

பெரியார் என்ன சொல்கிறார் என்பதை இங்கே சுட்டிக்காட்டுகிறோம்.

23.4.1961 அன்று காஞ்சிபுரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்குத் தந்தை பெரியார் அவர்கள் வந்தபொழுது, காஞ்சிபுர நகர மன்றத்தார் சிறந்த முறையில் வரவேற்பளித்து, ..சி. அவர்களின் படத்தினைத் திறந்து வைக்கும்படி தந்தை பெரியார் அவர்களைக் கேட்டுக்கொண்டார்கள்.

..சி. படத்தினைத் திறந்து வைத்து தந்தை பெரியார் உரையாற்றுகிறார்,

‘‘நான் எத்தனையோ பேர்களின் படங்களைத் திறந்திருக்கிறேன். முதல் மந்திரி காமராசர் அவர் களுடைய படத்தை 40, 50 தடவைகளில் திறந் திருக்கிறேன். இவைகளையெல்லாம் விட காலஞ்சென்ற பழம்பெரும் தேசபக்தர் நண்பர் ..சிதம் பரம் பிள்ளை  அவர்களுடைய திருவுருவப் படத்தைத் திறந்து வைப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

காலஞ்சென்ற நண்பர் சிதம்பரனார் அவர்கள் அன்று பட்ட கஷ்டமும், செய்த தியாகமும் இன்றைக்குப் பிள்ளைகளுக்குத் தெரிய வாய்ப்பே இல்லை.

இன்று ஒரு வாரம், 10 நாள்கள் சிறைக்குச் சென்றுவிட்டு வந்தால்கூட போதும், அதனைப் பெரிய தியாகம், தியாகம் என்று கூறி, பிரமாதப் படுத்துகின்ற காலம் இது.

நாம் சிறைக்குச் சென்று வந்து, தியாகத்தை மக்களிடத்திலே கூற, மக்களிடம் விளம்பரம் பெறலாம், ஓட்டு சேகரிக்கப் பயன்படுத்திக் கொள்வதை இன்றைக்கு நாம் காண்கிறோம். அந்தக் காலம் அப்படிப்பட்ட காலமல்ல.

அன்று சிதம்பரனார் அவர்கள் சிறையில் இருந்தபொழுது, சிறைச்சாலையில் , பி வகுப்பு கிடையாது. மூத்திரச் சட்டியும், தண்ணீர்ச் சட்டியும் ஒன்றேதான். கக்கூசும், படுக்கை அறையும் ஒரே அறையிலேதான். நானும் அந்தக் காலத்தில் சிறைக்குப் போனவன்தான்.

சிறையில் கக்கூஸ் இருக்கும்; ஆனால், சிறையைப் பார்வையிட அய்.ஜி. அவர்கள் வரும்பொழுதுதான், திறந்து வைத்து, கக்கூஸ் சுத்தமாக இருப்பதாகக் காட்டுவார்கள். மற்றபடி மல, ஜலம் கழித்துப் போவதற்கு ரூமில் சட்டிதான் இருக்கும். இப்படிப்பட்ட கொடுமையை முதல் முதல் அரசியலின் பேரால் அனுபவித்தவர் நம்முடைய சிதம்பரனார்தான்.

இவருக்கு அரசாங்கம் அன்று பதினான்கு, பதி னான்கு வருஷமாக 28 வருஷம் ஆயுள்தண்டனை விதித்தது. அன்றுதான் களி உணவு; சாக்குப் பைதான் படுக்கக் கொடுப்பார்கள்.

இன்று அரசியல் பேரால் சிறைக்குப் போவோ ருக்கு மெத்தை, தலையணை கொடுப்பதுபோன்று, அன்று கிடையாது.

அங்கு கொடுக்கப்படும் சாக்கில், ஒவ்வொரு சாக்கின் இழையிலும் ஒரு மூட்டைப் பூச்சி இருக்கும். இப்படிப்பட்ட உண்மையான தியாகி சாகிறபொழுது சோற்றுக்கே திண்டாட்டமாய் இருந்தது.''

இதைப் படிக்கின்றபொழுதும், அவர் பேசுவதைக் கேட்கின்ற பொழுதும் கண்ணீர் விடுகின்ற அளவிற்கு இருக்கிறது தோழர்களே!

பெரிய தியாகம் செய்த ஒருவருக்கு இந்த நாட்டின் வரலாற்றில் உரிய இடம் கிடைக்கவில்லை

ஒரு தமிழனாகப் பிறந்த குற்றம் - அவ்வளவு பெரிய தியாகம் செய்த ஒருவருக்கு இந்த நாட்டின் வரலாற்றில் உரிய இடம் கிடைக்கவில்லை.

அதற்கு என்ன காரணம்?

ஜாதிதானே அதற்குக் காரணம் - பிறவி பேதம்தானே அதற்குக் காரணம்.

அருள்கூர்ந்து தேசியத்தினுடைய பொது நிலையில் நின்று, மனிதநேயத்தோடு எண்ணிப் பாருங்கள்.

தந்தை பெரியார் மேலும் அவரது உரையில்,

இப்படிப்பட்ட உண்மையான தியாகிக்கு சாகிற பொழுது சோற்றுக்கே திண்டாட்டமாக இருந்தது. அநேகரிடத்தில் நன்கொடை வாங்கி வாழ்க்கை நடத்தவேண்டியவரானார். இப்படியெல்லாம் கஷ்டப்பட்டார்.

இந்த நாட்டில் அரசியல் பெயர்கொண்டு பொது வாழ்வில் இருக்கும்பொழுது, அன்னக்காவடிகளாய் இருந்தவர்கள் எல்லாம் இன்றைக்கு அய்ந்து லட்சம், பத்து லட்சம், இரண்டு கார், மூன்று கார் பெற்று இருப்பதைக் காணுகிறோம்.

அந்தக் காலத்தில் சிறையில் இருந்து விடுதலை அடைந்த சிதம்பரனார் சோற்றுக்கே திண்டாடினார். கஸ்தூரி ரங்க அய்யங்கார், திலகர் சுயராஜ்ஜிய பண்டிலிருந்து மாதம் 30 ரூபாய் கொடுத்து வந்தார்.

திலகர் சுயராஜ்ஜிய பண்ட் என்பது,  காந்தியா ருக்கு விரோதமாக ஏற்படுத்தியிருந்த ஒன்றாகும். திலகருக்கும், காந்தியாருக்கும் ஏற்பட்ட மிகப் பெரிய கருத்து வேறுபாடு அதையொட்டி வந்ததாகும்.

நம்பிக்கையில்லை என்று அவ்வளவு தூரத் தில்தான், சிதம்பரம் பிள்ளைக்கு இயற்கையிலேயே அகிம்சை பிடிக்காது. எனவே, திலகர் கட்சியில் சேர்ந்தார். திலகர் கொள்கையினை பிரச்சாரம் செய்து வைத்தார். இவருக்கு 30 ரூபாய்தான் அலவன்சாகக் கொடுக்கப்பட்டது.

வக்கீல் சன்னத் வாங்க எவ்வளவோ பிரயத் தனம் செய்தார்; மீண்டும் வக்கீலாகவேண்டும் என்று. எவ்வளவோ பிரயத்தனம் செய்தும் கிடைக்கவில்லை.

வீடு வாசலை இழந்தார். மனைவி, மக்கள் பட்டினி கிடந்தார்கள். பிள்ளைகளைப் படிக்க வைக்க முடியவில்லை.

தோழர்களே, அரசியல் பேரால் கஷ்டப் பட்டவர்களில் இவர்தான் முதலாவதாக சொல்ல வேண்டும். இவர் அரசியலின் பேரால் எந்தப் பிரதிபலனையும் அடையவில்லை.

நான் முன்பு குறிப்பிட்டதைப்போல, அன்னக் காவடி அரசியலில் நுழைந்தவர்கள் எல்லாம், வீட்டு வாடகைக் கொடுக்க யோக்கியதை இல்லாத வர்களுக்கெல்லாம் இன்று அரசியல் வாழ்வின் காரணமாக, மூன்று, நான்கு பங்களாக்கள் உள்ளன.

ரயிலில் இறங்கி வீட்டிற்குப் போக, வண்டி வாடகைக் கொடுக்க வழியற்று மூட்டையைத் தலையில் சுமந்து போனவர்கள் எல்லாம் இன் றைக்கு இரண்டு கார், மூன்று கார்கள் இருப்பதைக் காணுகிறோம். அய்ந்து லட்சம், பத்து லட்சம் சொத்து இருப்பதைக் காணுகிறோம்.

நீங்கள் அரசியல்காரர்கள் என்றால், மனதில் எண்ணிக்கொண்டு, இவருமா அப்படிப்பட்டவர்? என்றால், ஆம்! அவர்களும் அப்படிப்பட்டவர்தான் என்று  சொல்வதற்குத் துணிவு வேண்டும்.

இவருடைய தியாகம் இவரை செக்கிழுக்க வைத்தது; ஜெயிலில் உதைதான் கிடைத்தது. சோற்றுக்குத் திண்டாட வைத்தது; கேவலம் 30 ரூபாய் சம்பளத்திற்கு பிரச்சாரகராக இருந்த இப்படிப்பட்ட உத்தமரான உண்மைத் தியாகியை காங்கிரஸ் விளம்பரப்படுத்தவே இல்லை.

சிதம்பரனாரின் கதிதான், அதில் நான் மட்டும் தான் விதிவிலக்கு. திரு.வி.கல்யாணசுந்தர முத லியார், வரதராசுலு நாயுடு முதலியவர்களின் சங்கதி, இறுதிக்காலத்தில் என்னவென்று உங்களுக் கெல்லாம் என்ன தெரியும்?

இந்த நாட்டில் காங்கிரசுக்குமேடையே இல்லாத காலம். ஜஸ்டிஸ் ஆதிக்கம் செலுத்திய காலம். சிதம்பரனார் அவர்களும், திரு.வி.., வரதராசுலு நாயுடு அவர்களும் எல்லோரும் பாடுபட்டோம்.

காங்கிரசில் சீனிவாச அய்யங்கார், ராஜாஜி அவர்களுக்கெல்லாம் மேடை தேடிப் பிடித்துக் கொடுத்தோம்.

இந்தத் திரு.வி.., வரதராசுலு நாயுடு சங்கதி சாகிற காலத்தில் என்னாயிற்று தெரியுமா?

திரு.வி..வுக்கு சாகிற காலத்தில் வீட்டு வாடகை கொடுக்க முடியாது வெளியேற்றப்பட்டார்; ஆர் லிக்சுக்கு வகையில்லை. பார்க்கப் போகின்றவர்கள் வாங்கிக் கொடுப்பார்கள். (எவ்வளவு மறைமுக மாகச் சொல்கிறார் தந்தை பெரியார் ஆர்லிக்சு வாங்கிக் கொடுத்தார்). அவரைக் கொச்சைப்படுத்த அல்ல நண்பர்களே, யாரும் தவறாக நினைக்கக் கூடாது. எவ்வளவு ஏழ்மையிலும் கொள்கையா ளராக வாழ்ந்தார்.   

 (தொடரும்)

No comments:

Post a Comment