காபூல், செப். 9- ஆப்கானிஸ் தானைக் கைப்பற்றிய தலி பான்கள் அங்கு இடைக் கால இஸ்லாமிய எமி ரேட் அரசை நிறுவப் போவதாக அறிவித்து, அதற்கான அமைச்சர வைப் பட்டியலையும் வெளியிட்டுள்ளனர்.
தலிபான்கள் அறிவித் துள்ள அமைச்சரவையில் ஒரு பெண் கூட இல்லை. கடந்த முறையைப் போன்று ஆட்சி இருக் காது, பெண்களுக்கான உரிமைகள் வழங்கப்படும், கல்வி உரிமை, வேலைக் குச் செல்லும் உரிமை போன்றவை வழங்கப் படும் என்று தலிபான்கள் அறிவித்த நிலையில் அமைச்சரவையில் ஒரு பெண் கூட இல்லை.
அமைச்சரவையில் இடம் பெற்ற பெரும்பா லான தலிபான்கள், தீவிர மான அடிப்படைவாதி கள், மதக் கோட்பாடு களையும், அரசியல் விதி களையும் சிறிதுகூட வில காமல் கடினமாகக் கடைப்பிடிக்கக்கூடிய வர்கள் என்று தெரிவிக் கப்பட்டுள்ளது.
ஆப்கனில் அமையும் இடைக்கால இஸ்லாமிய எமிரேட் அரசில் 33 பேர் அமைச்சர்களாக நியமிக் கப்பட்டுள்ளனர். தேவைப் பட்டால் அடுத்தடுத்து அமைச்சரவை விரிவாக் கம் செய்யப்படும் என்று தலிபான் செய்தித்தொடர் பாளர் சைஹைல் ஷாகீன் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கனின் பிரதமராக முல்லா முகமது ஹசன் அகுந்த் நியமிக்கப்பட்டுள் ளார். அவருக்கு துணை யாக முல்லா அப்துல் கனி பராதரும், மவுளவி அப் துல் சலாம் ஹனாபி நிய மிக்கப்பட்டுள்ளனர்.
தலிபான் தீவிரவாத அமைப்பை நிறுவிய முல்லா ஓமரின் நெருங்கிய உத வியாளர் முல்லா முகமது ஹசன் அகுந்த். கடந்த 1996 முதல் 2001ஆம் ஆண்டுவரை தலிபான் ஆட்சியில் அகுந்த் வெளி யுறவுத்துறை அமைச்ச ராக இருந்தார்.
முல்லா ஓமரின் மகன் மவுலவி முகமது யாகூப் முஜாஹித் பாதுகாப்புத் துறை அமைச்சராகவும், உள்துறை அமைச்சராக மவுலவி சிராஜ் உத்தின் ஹக்கானி நியமிக்கப் பட்டுள்ளார். அமெரிக்க எப்பிஅய் அமைப்பால் தேடப்படும் தீவிரவாதி யாக சிராஜ் உத்தின் ஹக் கானி அறிவிக்கப்பட்டுள் ளார். தற்போது தீவிர வாதியாக அறிவிக்கப் பட்ட ஒருவர் அரசில் பதவி வகிப்பதால், அமெ ரிக்கா, ஆப்கன் இடையி லான உறவும் மேம்படுவது கடினம்தான். அனைத்து நாடுகளுடனும் சுமூக மான உறவு வைத்திருப் போம் எனத் தலிபான்கள் கூறிய நிலையில் தீவிரவா தியாக அறிவிக்கப்பட்ட ஒருவர் அமைச்சரவையில் இடம் பெற்றிருப்பது அமெரிக்கா, தலிபான் இடையிலான உறவை பாதிக்கும்.
வெளியுறவுத் துறை அமைச்சராக தோஹா வில் தலிபான் சார்பில் பேச்சுவார்த்தை நடத்திய மவுலவி அமிர் கான் முதாகி நியமிக்கப்பட்டு உள்ளார்.
நிதித்துறை அமைச்ச ராக முல்லா ஹிதயத் துல்லா பத்ரியும், கல்வித் துறை அமைச்சராக நூருல்லா முனிரும், பொரு ளாதார விவகாரத்துறை அமைச்சராக குவாரி தின் முகமது ஹனிப் நியமிக் கப்பட்டுள்ளனர்.
அமெரிக்கா அவசரம் காட்டாது
ஆப்கானிஸ்தானில் அமைக்கப்பட்டுள்ள தலீபான் தலைமையி லான புதிய அரசை அங் கீகரிப்பதில் அமெரிக்கா அவசரம் காட்டாது என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜென் பெஸ்கி கூறுகை யில், “தலீபான்கள் அரசை அங்கீகரிப்பதில் எந்த அவசரமும் இல்லை. தலீபான்கள் எடுக்கும் நடவடிக்கையை பொறுத்து இந்த விவகாரத்தில் முடிவு எடுக்கப்படும். உலக நாடு கள் பார்த்து கொண்டி ருக்கின்றன. அதேபோல் அமெரிக்காவும் தலீபான் கள் நடவடிக்கையை கண் காணிக்கும்” என்றார்.
No comments:
Post a Comment