சென்னை, செப்.1 தமிழ்நாட்டில் சமையல் எரிவாயு உருளை விலை 25 ரூபாய் உயர்த்தப்பட்டு ரூ.902.50க்கு விற்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு உருளை விலை ரூ.25 உயர்ந்து ரூ.902.50க்கு விற்கப்படுகிறது. சிலிண்டர் ஒன்றின் விலை 875 ரூபாயில் இருந்து 900 ரூபாயாக அதிகரித்துள்ளது. வணிக அளவில் பயன்படுத்தபப்டும் சமையல் எரிவாயு விலை ரூ.75 உயர்ந்து ரூ.1,831க்கு விற்கப்படுகிறது. கடந்த ஓராண்டில் மட்டும் வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ.285 ஆக உயர்ந்துள்ளது.
இந்த விலை உயர்வு இல்லத்தரசிகள் மற்றும் பெண்கள் இடையே மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் சமையல் எரிவாயு உருளையின் விலையை 25 ரூபாய் அதிரடியாக உயர்த்தி மக்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்திக் கொண்டுள்ளது என்பது குறிப்படத்தக்கது.
No comments:
Post a Comment