கொல்கத்தா,செப்.11- மேற்கு வங்காள சட்டப் பேரவைக்கு கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் 8 கட்டங்களாக நடந்த தேர்தலில் மம்தா திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்தது. ஆனாலும் வழக்கமாக போட்டியிட்டு வந்த பவானிப்பூர் தொகுதிக்கு பதிலாக நந்திகிராம் தொகுதிக்கு மாறி களம்கண்ட மம்தா, அங்கு அதிர்ச்சித் தோல்வி அடைந்தார்.
இந்த நிலையில் பவானிப்பூர் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட மம்தா நேற்று (10.9.2021) வேட்புமனு தாக்கல் செய் தார். இடைத்தேர்தல் ஓட்டு எண்ணிக்கை 3.10.2021 அன்று நடைபெறுகிறது. இந்த தொகுதியில் மம்தாவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி வேட்பாளரை நிறுத்த வில்லை. அதே நேரத்தில் சிறீஜிப் பிஸ்வாஸ் என்பவரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிறுத்தி உள் ளது. இந்த நிலையில் மம்தாவை எதிர்த்து களம் காணும் வேட்பாளரை பா.ஜ.க. நேற்று அறிவித்தது. மம்தாவை எதிர்த்து நிறுத்தப் பட்டிருப்பவர், 41 வயதான பெண் வழக்கு ரைஞர் பிரியங்கா திப்ரேவால் ஆவார்.
No comments:
Post a Comment