ஒரு வார இதழ் - குறிப்பிட்ட கழகத் தோழர்கள் சிலரிடம் தொடர்பு தொடர்புகொண்டு ‘நீங்கள் திராவிடர் கழகத்திலிருந்து மனம் நொந்து விலகி இருக்கிறீர்களா? காரணம் என்ன? அதைப்பற்றிய விவரங்களைக் கூறுங்கள்' என்று ஒரு முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அப்படி தொடர்பு கொள்ளப்பட்ட தோழர்களும் சரியான சூடு கொடுத்து, மூக்கையும் உடைத் திருக்கிறார்கள். இந்தக் கேடு கெட்ட வேலை ஏன், இந்த வெட்கம் கெட்ட ஏட்டுக்கு?
சிறைக்குள்ளே கிடக்கவேண்டிய ஓர் ஆசாமி, போனால் போகிறது என்று ஆட்சியில் இருந்தவர்களின் தயவால் வெளியில் நடமாட முடிந்திருக்கிறது.
‘வரதுகள்' எங்களிடம் வாலாட்ட வேண்டாம் - பார்ப்பனர்கள் எந்த வகையிலாவது திராவிடர் கழகத்தைக் கொச்சைப்படுத்திப் பார்க்கலாம் என்று இதுபோன்ற வேலையில் ஈடுபட்டால், எதிர்விளைவுதான் ஏற்படும் என்பதை நினைவில் கொள்க!
No comments:
Post a Comment