அரசியல் முதிர்ச்சியோடு செயல்படுபவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 8, 2021

அரசியல் முதிர்ச்சியோடு செயல்படுபவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சிவசேனா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராவத் பாராட்டு

மும்பை, செப். 8- அரசியல் முதிர்ச்சி யோடு செயல்படுபவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு..ஸ்டாலின் என் றும், ஒன்றிய பாஜக அரசு நேருவை வெறுப்பதேன் என்றும் ஒப்பிட்டு சிவசேனா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராவத் சிவ சேனா ஏட்டில் எழுதியுள்ள கட்டு ரையில் குறிப்பிட்டுள்ளார்.

சிவசேனாவின் நாளிதழான சாம்னாவில், வாராந்திர பத்தியான 'ரோக்தோக்' பகுதியில் அவர் எழு திய கட்டுரையில், “இந்தியாவின் 75ஆவது சுதந்திர தினத்தை முன் னிட்டு ஒன்றிய கல்வி அமைச்சகத் தின் ஒரு அமைப்பால் வெளியிடப் பட்ட சுவரொட்டியில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் படத்தை தவிர்ப்பது ஒன்றிய அர சின் "குறுகிய மனநிலையை" காட்டு கிறது.

ஒன்றிய அரசு ஏன் நேருவை மிகவும் வெறுக்கிறது. இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சில் (மிசிபிஸி), கல்வி அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு தன்னாட்சி அமைப்பு, நேரு மற்றும் மவுலான அபுல் கலாம் ஆசாத் ஆகியோரின் படங் களை அதன் சுவரொட்டியில் இருந்து விலக்கியுள்ளது அரசியல் பழிவாங்கும் செயலாகும்.

சுதந்திரப் போராட்டத்தில் பங்குபெறாதவர்கள் மற்றும் வர லாற்றை உருவாக்குபவர்கள்  சுதந் திரப் போராட்டத்தின் மாவீரர் களில் ஒருவரை ஒதுக்கி வைக்கிறார் கள். அரசியல் பழிவாங்கலுக்காகச் செய்யப்பட்ட இந்தச் செயல் நல்ல தல்ல. அவர்களின் குறுகிய மன நிலையைக் காட்டுகிறது. இது, ஒவ் வொரு சுதந்திரப் போராட்ட வீர ரையும் அவமதிப்பதாகும்.

சுதந்திரத்திற்குப் பிறகு நேரு வின் கொள்கைகளில் ஒருவருக்கு வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் சுதந்திரப் போராட்டத்திற்கு அவர் அளித்த பங்களிப்பை யாரா லும் மறுக்க முடியாது. நேருவை மிகவும் வெறுக்க அவர் என்ன செய்தார்?. உண்மையில், அவர் உருவாக்கிய பொதுத்துறை நிறுவ னங்கள், இப்போது இந்திய பொரு ளாதாரத்தை நகர்த்துவதற்காக விற்கப்படுகின்றன. நேருவின் "நீண்ட கால தொலைநோக்கு" காரணமாக நாடு பொருளாதார அழிவிலிருந்து காப்பாற்றப்பட்டது.

தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கு இலவசமாக விநியோகிக்கப்படும் பள்ளி பைகளில் இருந்து முன்னாள் முதலமைச் சர்கள் ஜெயலலிதா மற்றும்  பழ னிச்சாமி ஆகியோரின் படங்களை அகற்றுவதில்லை என்று அம்மாநி லத்தின் முதல மைச்சர் மு..ஸ்டா லின் சமீபத்தில் முடிவு எடுத்தார். இதன்மூலம், ஸ்டாலின் தனது அரசியல் முதிர்ச்சியை வெளிப்படுத்தியுள் ளார். நீங்கள் (பாஜக பெயரை குறிப்பிடாமல்) ஏன் நேருவை மிக வும் வெறுக்கிறீர்கள்?

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் கட்சித் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி, வாதோரா ஆகியோரை மோடி அரசு விமர்சிப்பது புரிந்து கொள்ளத்தக்கது. ‘ராஜீவ் காந்தி கேல் ரத்னா' விருது பெயரை மாற்றுவதன் மூலம் ஒன்றிய அரசு தனது வெறுப்பை பகிரங்கப்படுத் தியது. தேசத்தைக் கட்டமைப்பதில் நேரு மற்றும் இந்திரா காந்தியின் அழியாத பங்களிப்பை நீங்கள் அழிக்க முடியாது. நேருவின் பங் களிப்பை மறுப்பவர்கள் வரலாற் றின் வில்லன்கள் என்று அழைக்கப் படுவார்கள்" என்று குறிப்பிட்டு உள்ளார்.

No comments:

Post a Comment