செவ்வாயில் கிடைத்த ‘பாறை’ - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 11, 2021

செவ்வாயில் கிடைத்த ‘பாறை’

செவ்வாய்க் கோளில் முதல் பாறை மாதிரியைச் சேகரித்துள்ளதை, அமெரிக் காவின் நாசா விண்வெளி ஆய்வகம் உறுதிசெய்துள்ளது. செவ்வாய்க் கோளுக்கு அனுப்பப்பட்ட பிரிசெவன்ஸ் எனும் ஆய்வுக்கலன் மூலம், அந்தப் பாறை மாதிரி சேகரிக்கப்பட்டது.ஒரு சமூகவலைதளப் பதிவில், “எனக்குக் கிடைத்துவிட்டது!” என்று நாசா அறி வித்தது. பாறையின் மாதிரி, இம்மாதம் முதலாம் தேதியன்று சேகரிக்கப்பட்டது.

பாறை மாதிரி முதலில் எடுத்த படங் களில், தெளிவாக இல்லை என்றும் அது தெரிவித்தது. அதன் பிறகு ஆய்வுக்கலன் மீண்டும்  ஒரு புதிய நிழற்படத்தை தெளி வாக எடுத்து அனுப்பியது. அதனை ஆய்வு செய்த அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் அந்தத் தகவலை உறுதிப்படுத்த முடிந்ததாகக் கூறியது.

காற்று மற்றும் சூரிய வெப்பம் காரணமாக பலகோடி ஆண்டுகளில் மணல் இறுகி கிரனைட் போன்ற கனமான பாறை மாதிரி போல்  காணப்படும் படத்தையும் அது வெளியிட்டது.செவ்வாய்க் கோளில் உயிரினங்கள் ஏதும் உள்ளனவா என்று, அமெரிக்கா ஆராய்ந்துவருகிறது.அந்த முயற்சியின் ஓர் அங்கமாக, பிரிசெவரன்ஸஸ்  செவ்வாய்க் கோளுக்கு அனுப்பப்பட்டது. 2030-களில், நாசா, அய்ரோப்பிய விண்வெளி ஆய்வகத்துடன் இணைந்து செவ்வாய்க் கோளில் மாதிரிகளைச் சேகரிக்கும் பணியில் பங்கேற்கத் திட்டமிடுகிறது.

No comments:

Post a Comment