உரத்தநாடு வட்டம் தெற்கு நத்தம், திராவிடர் கழகத் தலைமைக் கழக சொற்பொழிவாளர் - வழக்குரைஞர் மானமிகு சி.கோவிந்தராசு அவர்கள் (வயது 57) நேற்று (9.9.2021) முற்பகல் 11 மணியளவில் திடீரென மார டைப்பால் காலமானார் என்ற செய்தி நமக்கு மிகுந்த வேதனை யையும், துயரத்தையும் அளிப்ப தாக உள்ளது.
அவர் மாணவப் பருவம் தொட்டே நம் கொள்கை களால் ஈர்க்கப்பட்டு, நல்ல பயிற்சி பெற்ற பேச்சாளராக, வழக்குரைஞராக உயர்ந்தவர்.
தந்தை பெரியார் பிறந்த நாளான செப். 17அய் "சமூக நீதி நாளாக" 6.9.2021 அன்று நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சட்டமன்றத்தில் பிரகடனப் படுத்திய மகிழ்ச்சியின் வெளிப்பாடாக, உரத்தநாடு தந்தை பெரியார் சிலை முன் முழக்கமிட்டு மகிழ்ந்தவர். மூன்று நாள்களில் அவரை நாம் இழந்தது குறித்து ஆற்றொண் ணாத் துன்பமும், துயரமும், சோகமும் அடைகிறோம்.
இச்செய்தி அறிந்தவுடன் துடித்துப் போன நாம், நேற்றே அவருடைய மகன், மகள் - ஆகியோருக்கு ஆழ்ந்த இரங்கலும் ஆறுதலும் தெரிவித்தோம். ஈடு செய்ய முடியாத இழப்பு - அவர்கள் குடும்பத்திற்கு மட்டுமல்ல; நம் இயக்கத்திற்கும்கூட. என்ன செய்வது? இயற்கையின் கோணல் புத்தி ‘அப்படி!'
அவருக்கு நமது வீரவணக்கம்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
10.9.2021
சென்னை
குறிப்பு: இன்று (10.9.2021) காலை 10 மணிக்கு எவ்வித மூடச் சடங்குகளும் இன்றி உடல் அடக்கம் செய்யப்பட்டது.
No comments:
Post a Comment