உலகின் முதல் பசுமை எக்கு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 2, 2021

உலகின் முதல் பசுமை எக்கு!

பெட்ரோலியம் சார்ந்த பொருட்கள் துளியும் பயன்படுத்தாமல் எக்கு தயாரிக்க முடியுமா? சுவீடனைச் சேர்ந்த எஸ்.எஸ்..பி., குழுமத்தின் எக்கு ஆலை, அது முடியும் என்று காட்டியிருக்கிறது.

உலக மாசுபாட்டில், சுரங்கத்தில் தாது எடுப்பது, அதை வாகனத்தில் கொண்டு வருவது, பிறகு ஆலையில் எக்கு உற்பத்தி என்று அனைத்திலும் பெட்ரோலியத்திற்கு கணிசமான பங்கு உண்டு. இந்த நிலையில், சுற்றுச்சூழல் மீது கார்பன் சுமையை சுமத்தாமல் எஸ்.எஸ்..பி., குழுமம் எக்கு தயாரித்திருப்பது உலக சாதனை தான்.சுவீடனின் பெரும் தொழிற்குழுமமான எஸ்.எஸ்..பி., அடுத்த சில ஆண்டுகளில் பசுமை நிறுவனமாக மாற திட்டமிட்டுள்ளது.

அதன் துவக்கமே, பெட்ரோலியம் சாரா எக்கு உற்பத்தி.இதற்கென அக்குழுமம், 'ஹைபிரிட்' என்ற உற்பத்தித் தொழில்நுட்ப முறையை உருவாக்கியுள்ளது.

அதன்படி, சரக்கு வாகன போக்குவரத்து, ஆலை எரிபொருள் உட்பட பல பகுதிகளில் ஹைட்ரஜனே எரிபொருளாக பயன்படுத்தப்படுகிறது. மேலும், தாதுக்களை உருக்கிக் கலக்கும் எரிகலனுக்கு, மின்சாரமே பயன்படுத்தப்படுகிறது.

இப்படி வெற்றிகரமாக உருவாக்கப் பட்ட முதல் பசுமை எக்கை, 'வால்வோ கார்' தொழிற்சாலை அண்மையில் வாங்கத் துவங்கியிருக்கிறது. இதே போல, சிமென்ட் போன்ற பிற தொழில்துறைகளும் பின்பற்றினால், பூமி விரைவில் பசுமைப் பந்தாக மாறும்.

No comments:

Post a Comment