ஏட்டுத் திக்குகளிலிருந்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 11, 2021

ஏட்டுத் திக்குகளிலிருந்து

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

·  கேரள மாநிலம் கண்ணூர் பல்கலைக்கழகத்தில் சவார்க்கர், எக்டேவர் நூல்கள் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படுவது குறித்து மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து இரு நபர் குழு அமைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

· இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் பெண்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை அளித்து பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்தார். நாட்டை தவறாக வழி நடத்துகிறார் என ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர்  தோட்டாஸ்ரா கூறியுள்ளார்.

தி டெலிகிராப்:

· ஜம்மு காஷ்மீரின் ஒருங்கிணைந்த கலாச்சாரத்தை உடைக்க ஆர்எஸ்எஸ், பாஜக முயற்சிப்பதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

.

- குடந்தை கருணா

No comments:

Post a Comment