புதுடில்லி, செப்.2 - அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமத்தின் (ஏஅய்சிடிஇ) உறுப்பினர் செயலர் ராஜீவ் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பொறியியல் படிப்புகளில் உயர் கல்வி பயிலும் மாணவிகளுக்கு ஏஅய்சிடிஇ சார்பில் பிரகதி திட்டத் தின் கீழ் ஆண்டுதோறும் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. அதேபோல, சக்ஷம் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறன் மாணவிகளுக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டு பிரகதி, சக்ஷம் திட்டங்களின்கீழ் கல்வி உதவித் தொகை பெறுவதற்கான இணைய தள விண்ணப்ப பதிவு தொடங்கப் பட்டுள்ளது.
உதவித் தொகை பெற விரும்பும் மாணவிகள் www.aicte-pragati-saksham-gov.in மற்றும் https://scholarships.gov.in ஆகிய இணைய தளங்கள் வழியாக நவம்பர் 30ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். புதி தாக விண்ணப்பிப்பவர் மட்டுமின்றி, ஏற்கெனவே கல்வி உதவித்தொகை பெறுபவர்களும் விண்ணப்பங்களை புதுப்பித்துக் கொள்ள வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் வழிமுறைகள் உள்ளிட்ட கூடுதல் விவரங்களை www.aicte-india.org என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ள லாம். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.
இந்த திட்டத்தின்கீழ் மாணவி களுக்கு உதவித் தொகையாக ஆண் டுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப் படுகிறது.
No comments:
Post a Comment