பெரியார் பிறந்தநாள் சமூகநீதி நாளாக அறிவிப்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஓ.பன்னீர்செல்வம் பாராட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 8, 2021

பெரியார் பிறந்தநாள் சமூகநீதி நாளாக அறிவிப்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஓ.பன்னீர்செல்வம் பாராட்டு

சென்னை, செப். 8- பெரியார் பிறந்த நாள் சமூகநீதி நாளாக கொண்டாடப்படும் என்று அறிவித்த முதலமைச்சர் மு..ஸ்டாலினுக்கு, .பன்னீர் செல்வம் பாராட்டு தெரிவித் துள்ளார்.

இதுதொடர்பாக .. .தி.மு.. ஒருங்கிணைப்பா ளர் .பன்னீர்செல்வம்  வெளியிட்ட அறிக்கை:

பாரதியாரும்... பெரியாரும்....

இந்திய விடுதலைக்கு முன், மொழிப்பற்றினையும், நாட்டுப் பற்றினையும், ஒருமைப்பாட்டினையும், காவேரி போல் பெருக்கெடுத்து ஓடும் தன் பாட்டுத் திறத்தால், கவிதை நயத்தால் உணர்த்தி, உறங்கிக் கிடக்கும் மக்களைத் தட்டி எழுப்பி, விடுதலை உணர்வினை ஊட்டியவர் மகாகவி பாரதியார் என்றால், விடுதலைக்குப் பின் பகுத்தறிவு, சுயமரியாதை, தன்மானம், சமூகநீதி ஆகியவற்றை மக்க ளிடையே பரப்பி தமிழ்நாட் டில் சமுதாய மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர் தந்தை பெரியார்.

தந்தை பெரியார் வகுத்துத் தந்த பாதையில் சமுதாயச் சீர்திருத்தக் கருத்துக்களை பட்டிதொட்டியெங்கும் எடுத்துச் சென்ற பெருமை அண்ணா, எம்.ஜி.ஆர்., மு.கலைஞர், ஜெயலலிதா ஆகி யோரையே சாரும்.

சமூக நீதி உள்ளிட்ட பல் வேறு கொள்கைகளை அடிப் படையாகக் கொண்டு தந்தை பெரியாரால் தொடங்கப் பட்ட திராவிடர் கழகம், சமூக மாற்றத்தை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல், சமூக நீதிக் காக பாடுபட்டவர்களை பெருமைப்படுத்தும் பணியை யும் செய்து வருகிறது. அந்த வகையில், தமிழ்நாட்டில் 69 விழுக்காடு இடஒதுக்கீட் டினை பாதுகாத்ததற்காக, ‘சமூகநீதி காத்த வீராங்கனைஎன்ற பட்டத்தை ஜெயலலி தாவுக்கு திராவிடர் கழகம் வழங்கி கவுரவித்தது என்ப தைத் இந்தத் தருணத்தில் நினைவுகூர விரும்புகிறேன்.

அவர் சொன்னார். இவர் சொன்னார் என்று நம்பி அறிவிழந்து போகாமல் எவன் சொன்ன சொல்லானாலும் பகுத்தறிந்து உள் அறிவால் உணர்என்று சிந்தனையாளர் சாக்ரடீஸ் கூறியதை வற்பு றுத்தி, மக்களிடையே எடுத் துச் சென்று தமிழ்நாட்டில் ஒரு சமூகப் புரட்சியை ஏற் படுத்திய தந்தை பெரியார் அவர்களை பெருமைப்படுத் தும் வகையில், அவர் பிறந்த நாளான செப்டம்பர் 17 ஆம் நாள்சமூக நீதிநாளாக கொண்டாடப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருப் பது வரவேற்புக்குரியது.

இந்த அறிவிப்பிற்கு கார ணமான தமிழ்நாடு முதல மைச்சர் மு..ஸ்டாலினுக்கு  எனது நன்றியினைத் தெரிவித் துக் கொள்வதோடு, இதனை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத் தின் சார்பில் வரவேற்கிறேன்.

இவ்வாறு அவர் கூறி யுள்ளார்.

No comments:

Post a Comment