தூத்துக்குடி, செப். 30- தூத்துக் குடி மாவட்டம் விளாத்தி குளம் அருகே உள்ள ஜமீன் செங்கப்படை கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன், கூலித் தொழிலாளி. இவருக்கு விவசாய நிலமும் உள் ளது. இவரது மனைவி மதிவதனா. இந்த தம் பதிக்கு தெய்வ வெனுசியா (வயது 6), தெய்வ கனுசியா (4) ஆகிய இரு குழந் தைகள். வேல்முருகன் வீட்டின் அருகில் விநா யகர் கோவில் உள்ளது. கடந்த 21ஆம் தேதி காலை விநாயகர் கோவி லில் தெய்வ வெனுசியா, தெய்வ கனுசியா உள் ளிட்ட 4 குழந்தைகள் விளை யாடிக் கொண்டிருந் தனர்.
அப்போது தெய்வ வெனுசியா கோவில் உள்ளே சென்று ‘சாமி' கும்பிட்டாள். பின்னர் திருநீறு பூச முயன்றபோது அங்கு விளக்கில் எரிந்து கொண்டி ருந்த தீ தெய்வ வெனுசியா ஆடையின் மீது எதிர்பா ராதவிதமாக பற்றிப் பிடித்து எரிந்தது. பின்னர் உடல் முழுவதும் தீ பரவி யது. இதனால் வலிதாங்க முடியாமல் அவள் அலறினாள். கோவிலில் இருந்து உடலில் தீ எரிந்தபடி, அல றியடித்துக்கொண்டு வீட் டிற்கு ஓடி வந்தாள். அவள் அணிந்திருந்த கவுனில் தீப்பற்றி, அது உடலில் ஒட்டிக் கொண் டது.
மகள் உடலில் தீ எரிந்த படி வீட்டுக்கு ஓடி வந்ததை பார்த்ததும் மதி வதனா அதிர்ச்சி அடைந் தார். உடனே தெய்வ வெனுசியா உடல் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தார். பின் னர் அக்கம்பக்கத்தினர் உதவி யுடன் தெய்வ வெனு சியாவை விளாத்தி குளம் அரசு மருத்துவ மனைக்கு அழைத்து சென்று சிகிச் சைக்காக சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப் பட்டு மேல்சிகிச்சைக்காக தூத்துக் குடி அரசு மருத்துவக்கல் லூரி மருத் துவமனையில் அனும திக்கப்பட்டாள். பின்னர் அங்குள்ள தனி யார் மருத் துவமனையில் சிகிச்சைக் காக சேர்த் தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி தெய்வ வெனுசியா 28.9.2021 அன்று பரிதாப மாக இறந்தாள்.
No comments:
Post a Comment