புதுடில்லி, செப்.2 ஜி.டி.பி. உயர்வு என்றால் சமையல் எரிவாயு சிலிண்டர், டீசல் மற்றும் பெட்ரோல் விலை என்று ஒன்றிய அரசு புரிந்து கொண்டுள்ளதாக ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை நேற்று (1.9.2021) மீண்டும் 25 ரூபாய் உயர்த்தப்படுவதாக எண்ணெய் நிறுவ னங்கள் அறிவித்துள்ளன. இரண்டு வாரங் களில் இரண்டாவது முறையாக எரிவாயு உருளை விலை உயர்த்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப் பில் பேசிய காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல் காந்தி, “பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு உருளை விலை உயர்வு மூலம் ஒன்றிய அரசுக்கு ரூ 23 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளது. இந்த 23 லட்சம் கோடி ரூபாய் எங்கே போனது? 2014இல் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த சமயத்தில் சமையல் எரிவாயு உருளை விலை ரூ 410ஆக இருந்தது. இப்போது சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 116 விழுக்காடு உயர்ந்து ரூ 885ஆக உள்ளது.
பெட்ரோல் விலை 2014இல் 71.5 ரூபா யாக இருந்தது. இப்போது 42% உயர்ந்து ரூ.101ஆக உள்ளது. அதேபோல 57 ரூபாயாக இருந்த டீசல் விலையும் இப் போது 88 ரூபாயாக உயர்ந்துள்ளது. ஆனால், பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் ஜிடிபி GDP தொடர்ந்து உயர்ந்து வருவ தாகக் கூறுகிறார். மேலும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் காலத்திலும் ஜி.டி.பி. உயரும் என்றே கூறுகிறார். அவர்கள் கூறும் நிஞிறி என்றால் என்ன என்பது இப்போது தான் எனக்குப் புரிகிறது. GDP என்றால் ‘Gas -Diesel -Petrol’ விலை என்று அவர்கள் புரிந்து கொண்டுள் ளார்கள். அதனால் தான் இது தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வதால் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கிறது என்று கூறுகின் றனர். 2014இல் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது, பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெய் விலை 105ஆக இருந்தது. இப்போது அது 32 விழுக்காடு குறைவாக 71ஆக உள்ளது. அதேபோல சமையல் எரிவாயு உருளை விலையும் பன்னாட்டு சந்தையில் இப்போது 653 ரூபாயாக உள்ளது. இது 2014இல் இருந்த 880 ரூபாயைவிட 26 விழுக்காடு குறைவாகும்.
பெட்ரோல், டீசல் விலையேற்றம் என்பது நாட்டின் அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கிறது. பெட்ரோல் -டீசல் விலை உயரும் போது, இதனால் நேரடியாகவும் மறைமுகமாகவும் பல கோடி மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். கடந்த 7 ஆண்டுகளாகவே நாட்டிலுள்ள விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், அரசு ஊழியர்கள், நேர்மையான தொழில திபர்கள் ஆகியோர் கடுமையாகப் பாதிக் கப்பட்டுள்ளனர். நரேந்திர மோடியின் நான்கைந்து நண்பர்களுக்கு மட்டுமே அனைத்து பலன்களும் கிடைக்கிறது” என்று அவர் கூறினார்.
பள்ளிகள் திறப்பு: முதல் நாளில் 85 சதவீத மாணவர்கள் வருகை
சென்னை, செப்.2 பள்ளிகள் திறக்கப் பட்டதை தொடர்ந்து, நேற்று (1.9.2021) முதல் நாளில் 85 சதவீத மாணவர்கள் வருகை தந்தனர்.
கரோனா ஊரடங்கு தளர்வு காரணமாக பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. 9, 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்கள் மட்டும் வரவழைக்கப்பட்டனர். பல்வேறு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வகுப்புகள் தொடங்கப்பட்டு இருக்கின்றன.
இந்த நிலையில் வகுப்புகள் தொடங்கப்பட்ட முதல் நாளில் இடவசதி இருந்த பள்ளிகளில் 9, 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டு இருந்தனர். இட வசதி இல்லாத பள்ளிகளில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்கள் மட்டும் வரவழைக்கப் பட்டு, 9 மற்றும் 11-ஆம் வகுப்பு மாண வர்களை சுழற்சி முறையில் பள்ளிக்கு வரவழைக்க பள்ளிகள் திட்டமிட்டு, அதன் படி நேற்று வகுப்புகள் நடத்தப்பட்டன.
அந்தவகையில் முதல் நாளில் தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் சுமார் 75 முதல் 85 சதவீத மாணவர்கள் பள்ளிக்கு வந்ததாக தகவல்கள் தெரிவிக் கின்றன. சென்னையை பொறுத்த வரை யில், பெரும்பாலான மாணவர்கள் உற் சாகமாக பள்ளிக்கு வந்ததாக கூறப் படுகிறது.
No comments:
Post a Comment