அபுதாபியில், அரசு சுகாதார மய்யங்களுக்கு செல்ல ‘கிரீன் பாஸ்' கட்டாயம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 9, 2021

அபுதாபியில், அரசு சுகாதார மய்யங்களுக்கு செல்ல ‘கிரீன் பாஸ்' கட்டாயம்

 அபுதாபி, செப். 9- அபுதாபி சுகாதார சேவைகள் துறையின் (சேஹா) சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப் பதாவது:- அபுதாபி சுகாதார சேவைகள் துறையின் கீழ் செயல்படும் அதன் அனைத்து சுகாதார, மருத்துவ மய்யங் களுக்கும் 16 வயதுக்கு மேற்பட்டோர் செல்லகிரீன் பாஸ் கட்டாயம்' என அறிவித்துள்ளது. இதில் தற்போது அந்த மய்யங்களில் அவசர சேவை பிரிவுகள் மற்றும் டிரைவ் த்ரூ பரிசோதனை வசதிகளை பெறுவது தவிர மற்ற மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சைக்கு கிரீன் பாஸ் அவசியமாகும். இந்த அறிவிப்பானது நேற்று (6.9.2021) முதல் அனைத்து அரசு மய்யங்களிலும் அமலுக்கு வரு கிறது. எனவே 16 வயதுக்கு மேற்பட்டோர் தடுப்பூசி மய்யம் உள்ளிட்ட அனைத்து சுகாதார நிலையங்களுக்கும் செல்ல இந்த முறை அவசியமாகிறது.

மனிதன் வயிற்றிலிருந்த அலைபேசி அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்

பிரிஸ்டினா, செப். 9- கோசாவா நாட்டில் ஓல்டு பிரிஸ்டினா எனும் பகுதியில் வசித்த 33 வயது நபர்  ஓருவர் 2000ஆம் ஆண்டு மாடல் பழைய நோக்கியா 3310 மாடல் அலை பேசியை  விழுங்கியுள்ளார். இதை தொடர்ந்து  அந்த நபர் வயிற்று வலியால் துடித்து உள்ளார்.

அதையடுத்து மருத்துவமனைக்கு சென்ற  அவரை மருத்துவர் எக்ஸ்-ரே மற்றும் எண்டோஸ்கோபி  எடுத்து அலைபேசி இருக்கும் இடத்தைக் கண்டறிந்து 2 மணி நேரம் போராடி அதை அறுவை சிகிச்சை மூலமாக அகற்றியுள்ளனர்.

அறுவைசிகிச்சைக்குப் பிறகு, மருத்துவர் டெல்ஜாகு தனது முகநூலில் தொலைபேசியின் ஒளிப்படங்களையும், மனிதனின் வயிற்றுக்குள் இருந்தபோது எக்ஸ்-ரே மற்றும் எண்டோஸ்கோபி படங்களையும் பகிர்ந்து உள்ளார்.

மேலும் அலைபேசியின் பேட்டரி குறித்து தான் எங்களுக்கு மிகவும் கவலையாக இருந்தது, ஏனென்றால் அது மனிதனின் வயிற்றில் வெடிக்கக் கூடும்" என்று அவர் கூறினார்.

No comments:

Post a Comment