புதுடில்லி, செப். 1- இந்தியாவில் சீன செயலி கள் மக்களின் தரவுகளை அதிகளவில் திருடி வருகின்றன என குற்றம் சாட் டப்பட்டு, 200க்கும் அதிகமான சீன செயலிகளை ஒன்றிய அரசு மக்களின் தகவல் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு தடை செய்தது.
இந்த தடைக்கு பின்பு இந்திய சீன எல்லையில் இரு நாட்டு ராணுவத்திற்கு மத்தியில் ஏற்பட்ட மோதலும் முக்கி யமான காரணம் என பேசப்பட்டாலும், சீன அரசு தற்போது தன் நாட்டின் தகவல் பாதுகாப்புக்காக சீன டெக் நிறுவனங்கள் மீது எடுத்துள்ள நட வடிக்கையின் மூலம் ஒன்றிய அரசு செய் தது சரி எனவும், எல்லை பிரச்சினைக்காக தடை செய்யப்படவில்லை என்பதும் நிரூபணமாகியுள்ளது. இவ்வளவு பிரச் சினைக்கு பின்பும் இந்தியாவில் இன்னும் சில சீன செயலிகள் இயங்கி வருவது மட்டும் அல்லாமல் கடந்த ஒரு வருடத் தில் அதாவது தடை உத்தரவு அறிவிக் கப்பட்ட பின்பு மிகப்பெரிய அள விலான வளர்ச்சியை அடைந்துள்ளன.
இந்தியாவில் சீன செயலிகள் தடை செய்யப்பட்ட பின்பு பல முன்னணி நிறுவனங்களின் செயலிகள் கூட அதாவது அலிபாபா, சியோமி போன்ற நிறுவனங்களின் செயலிகள் தங்களது சீன அடையாளத்தை மறைத்து புதிய நிறுவனத்தின் பெயரிலும், சீன பெயர் கள் அல்லாத பெயரில் இந்தியாவில் வலம் வருகின்றன. இந்நிலையில் இந்தி யாவில் தற்போது டாப் 60 செயலிகள் பட்டியலில் 8 சீன செயலிகள் உள்ளன. இந்த 8 சீன செயலிகளில் சுமார் 211 மில் லியன் வாடிக்கையாளர்கள் உள்ளனர், ஜூலை 2020இல் இந்த 8 செயலிகளின் மொத்த வாடிக்கையாளர்கள் எண் ணிக்கை வெறும் 96 மில்லியன் வாடிக் கையாளர்கள் மட்டுமே.
ஆனால் கடந்த 13 மாதத்தில் சீன செயலிகளாவே இருந்து, தனது அடை யாளத்தை வாடிக்கையாளர்களிடம் இருந்து மறைத்து சுமார் 115 மில்லியன் வாடிக்கையாளர்களை பல்வேறு வழி களில் பிடித்துள்ளது. இந்தியாவில் சீன செயலிகள் பாதுகாப்பற்றது என தெரிந்தும் சிலர் சீன செயலிகளை பதிவிறக்கம் செய்துள்ளதும் நடந்துள்ளது.
2020இல் சுமார் 267 சீன செயலிகள் அய்டி விதிகள் பிரிவு 69A கீழ் தடை செய்யப்பட்டன. இந்த தடையில் டிக்டாக், யூசி பிரவுசர், பப்ஜி, ஹலோ, அலி எக்ஸ்பிரஸ், லைகி, ஷேர்இட், மி கம்யூனிட்டி, வீ சேட், மைடூ, வெய்போ, பீகோ, லைவ் என பல செயலிகள் தடை செய்யப்பட்டன.
No comments:
Post a Comment