சில்லாங் செப் 11 திரிபுரா மாநிலத்தில் பிஷால்கர் அருகில் உள்ள சண்டன்ட் டிலா பகுதியைச் சேர்ந்த 16 வயது மாண வியை அதே பகுதியைச் சேர்ந்த 23 வய துள்ள இளைஞர் கடத்திச் சென்றுள் ளார். மாணவியை காணவில்லை என்று அவரது தந்தை அளித்த புகாரை ஏற்றுக்கொண்ட காவல் துறையினர், இது தொடர்பாக சர்க்கார் என்ற இளைஞர் மீது வழக்கு பதிவு செய் தனர்.
இந்நிலையில், மாணவியைக் கடத்திய சர்க்கார் என்ற இளைஞருக்கு உதவியதாக அந்த பகுதியைச் சேர்ந்த விஷ்வ இந்து பரிஷத் தலைவர் சந்திர சேகர் கர் மற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் தபன் தேவ்நாத் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்து இருக்கின்றனர்.
இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த அந்த மாணவியை கட்டாய மத மாற்றம் செய்ததாகவும், ஆள் கடத்தல் மற்றும் கட்டாய திருமணம் செய்த குற்றத்திற்காக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment